கஞ்சனும், வள்ளலும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணம் இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். மார்பி­ருந்து கழுத்து வரை இரும்பு அங்கிகளை அவ்விருவரும் அணிந்திருக்கின்றனர். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவரது அங்கி உடல் முழுவதும் விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடுமாறு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் விரியாது. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி­)  நூல்: புகாரி (1444)
 
நாம் இன்று உலகில் கண்கூடாகப் பார்க்கக் கூடிய உண்மையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உதாரணமிட்டுக் கூறியுள்ளார்கள். திருடர்கள், கொள்ளையர்கள், பணத்துக்காகக் கொலை செய்பவர்கள் உருவாவதற்குக் காரணம் ஏழைகளுக்கு உதவாமல் செல்வத்தைச் சேமித்து வைத்து, கஞ்சத்தனம் செய்பவர்கள் தான். செல்வத்தைச் சேமித்து, தாங்கள் மட்டும் சுகபோகமாக வாழ விரும்புகிறாôகள். ஆனால் அது அவர்களின் உயிருக்கே உலை வைத்து விடுகின்றது. இதற்கு இரும்பு அங்கி நெறிப்பதை அழகிய உதாரணமாகக் கூறியுள்ளார்கள். தர்மம் செய்பவன் யாரும் ஒன்றுமில்லாமல் ஓட்டாண்டியாகப் போனது கிடையாது. மாறாக அவருக்கு அதை விடவும் செல்வம் வளரும் என்பதற்கு இரும்பு அங்கியை தரையில் இழுத்துச் செல்வதை உதாரணமாகக் கூறியுள்ளார்கள்
ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் கஞ்சத்தனம் செய்வதைப் பயந்து கொள்ளுங்கள். அது தான் உங்களுக்கு முன் சென்றவர்களை அழித்தது. தங்களில் உள்ளவர்களை தாங்களே கொலை செய்வதற்கும் ஹராமானவைகளை ஹலாலாக்குவதின் பக்கம் அவர்களைக் கொண்டு சேர்த்ததும் இந்தக் கஞ்சத்தனம் தான்.  அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ர­லி)  நூல்: முஸ்லிம் (4675)
 
கஞ்சத்தனம் செய்பவர்கள் இவ்வுலகில் பல விதமான தீய காரியங்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள் என்பதைத் தான் மேற்கண்ட செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”அல்லாஹ் ஒருவருக்கு செல்வத்தைக் கொடுத்து, அதற்குரிய ஜகாத்தை அவர் கொடுக்கவில்லை என்றால் மறுமை நாளில் அவரது செல்வம் கொடிய விஷப் பற்களுடைய பாம்பாக மாற்றப்படும். அவரை அது சுற்றிக் கொண்டு அவருடைய தாடையை பிடித்து ‘நான் உனது செல்வம்; உனது கருவூலம்’ என்று சொல்லும்” என்று கூறிவிட்டு, ”கஞ்சத்தனம் செய்பவர்கள் அது தங்களுக்கு நல்லது என்று நினைக்க வேண்டாம். மாறாக அவர்களுக்குத் தீமையே! மறுமை நாளில் தாங்கள் கஞ்சத்தனம் செய்தது அவர்களுக்குத் தொங்க விடப்படும். வானங்கள் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கு உரியது. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்” (3:180) என்ற வசனத்தை ஓதினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)  நூல்: புகாரி (1403)
 
கஞ்சன் இவ்வுலகிலும் மறுமையிலும் இது போன்று நிம்மதியற்றவனாக Continue reading

பாவத்தை கழுவும் தொழுகை

”உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?” என்று கேட்டார்கள். ”அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது” என்று மக்கள் பதிலளித்தார்கள். ”இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185)
உடலை அழுக்கி­ருந்து தூய்மைப்படுத்தும் ஆற்றுக்கு தொழுகையை நபி (ஸல்) அவர்கள் உதாரணம் காட்டியுள்ளார்கள். பாவப் பரிகாரத்திற்கு உடலை வருத்த வேண்டும்; நீண்ட தூரம் பயணம் செய்து பாவக் கடனைத் தீர்க்க வேண்டும் என்றெல்லாம் கூறாமல் வீட்டு வாச­ல் ஓடுகின்ற, நமக்கு எளிதில் கிடைக்கின்ற ஆற்று நீர் உடலை தூய்மைப்படுத்துவதைப் போல எந்த விலையும் கொடுக்காமல் மிகப் பெரும் சிரமமும் இல்லாமல் நாம் தொழும் தொழுகை நாம் செய்யக் கூடிய பாவங்களைப் போக்கும் மருந்தாக உள்ளது என்று கூறியுள்ளார்கள். தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். (அல்குர்ஆன் 29:45) 

இஸ்லாம் குற்றங்களைத் தடுத்து அதற்குத் தண்டனை வழங்குவதோடு நின்று விடாமல் அதை விட்டும் தவிர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளை, தொழுகையின் மூலமாக சொல்­த் தருகிறது. தொழுபவர்கள் நாம் தொழுகிறோம் என்ற காரணத்திற்காகவாவது மானக்கேடான விஷயங்களை விட்டும் தவிர்ந்திருப்பார்கள். இன்று பெரும்பாலும் தொழக் கூடியவர்களிடம் பெரும் குற்றங்கள் நிகழ்வதைக் காண முடிவதில்லை. பாவங்களி­ருந்து விடுபட அல்லாஹ் நம்மை தொழுகையில் கண்காணிக்கிறான் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். தொழுகையில் அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற எண்ணம், பாவங்கள் குற்றங்கள் செய்யும் போதும் இறைவன் நம்மைக் கண்காணிக்கிறான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அவற்றைத் தடுக்கும் கருவியாக ஆகி விடுகின்றது. இது போல் ஐவேளைத் தொழுகையிலும் இந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் பாவங்களுக்கு வழியில்லாமல் போய் விடும்.
இஹ்ஸான் என்றால் என்ன ? என்று நபியவர்களிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கேட்கும் போது, ”(தொழுகையில்) அல்லாஹ்வை நீ பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கிறான் என்று (எண்ணி) நீ அவனை பார்ப்பது போன்று வணங்குவதாகும்” என்றுபதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 50
நாம் என்ன செய்தாலும் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் Continue reading