நன்மைக்குப் பத்து ! தீமைக்கு ஒன்றே !

ஏகஇறைவனின் திருப்பெயரால்…

مَن جَاء بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَمَن جَاء بِالسَّيِّئَةِ فَلاَ يُجْزَى إِلاَّ مِثْلَهَا وَهُمْ لاَ يُظْلَمُونَ 160

6:160. நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.


நன்மைக்குப் பத்து ! தீமைக்கு ஒன்றே !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் அளவற்ற அருளாலன்,நிகரற்ற அன்புடையோன் என்பதற்கு மேற்காணும் திருமறை வசனம் மிகப் பெரிய சான்றாகும்.

சுவனத்திற்கள் நுழைந்து அதன் எண்ணிலடங்கா இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நன்மைகள் அதிகம் சேர்த்தாக வேண்டும் அதனால் மக்கள் நற்செயல்கள் புரியம் போது அதை ஒன்றுக்குப் பத்தாக்குகிறான் அளவற்ற அருளாலன் அல்லாஹ்.

மக்கள் நற்செயல்கள் புரிந்து நன்மைகளை அதிகரித்துக் கொள்வதற்காகவும், தீய செயல்களிலிருந்து தங்களை தடுத்துக் கொள்வதற்காகவும் அவரவர்கள் பேசும் மொழியிலிருந்தே தூதர்கள் தேர்வு செய்யப்பட்டு அவ்வப்பொழுது தேவையான விளக்கங்களை ( வேதங்களை ) அனுப்பிக் கொண்டிருந்தான். திருமறைக்குர்ஆனுடன் வேதங்களின் வருகை முற்றுப் பெற்றது.

Continue reading

தவறு செய்யாதவன் மனிதனே அல்ல !.

ஏகஇறைவனின் திருப்பெயரால்….

நபி(ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது, ‘இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?’எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!என்றனர். உடனே அவர்கள் இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்க மக்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!என்றனர். உடனே அவர்கள் ‘(இது) புனித மிக்க நகரமாகும்! இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?’ என்றதும் மக்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் ‘(இது) புனிதமிக்க மாதமாகும்!எனக் கூறிவிட்டு, ‘உங்களுடைய இந்த (புனித) நகரத்தில் உங்களுடைய இந்த (புனித) மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போன்றே, அல்லாஹ் உங்கள் உயிர்களையும் உடைமைகளையும் உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!எனக்கூறினார்கள்… இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி 1742.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

ஒருவர் புனித தலத்தில் இருக்கும் பொழுது இறைவன் தடை செய்த எந்த ஒன்றையும் எந்தளவுக்கு செய்யத் துணிய மாட்டாரோ அந்தளவுக்கு புனித தலமல்லாத மற்ற இடங்களிலும் மனித உயிர்கள்,அவர்களது உடமைகள், அவர்களது மான மரியாதையின் மீது துஷ்பிரயோகம் செய்யக்கூடாது புனித தலத்தை மதிப்பதுப் போன்று மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றுப் பெருந்திரளாகக் குழுமி இருந்த அரஃபா மைதானத்தில் அமைதியே உருவான அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்கள் சமுதாயத்திற்கு எடுத்துக் கூறினார்கள்.

Continue reading

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி

جَزَاؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ
خَالِدِينَ فِيهَا أَبَدًا رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ 98:8 98:8.அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.

மறுமையின் இன்பம் மரணிக்க இருக்கின்ற நாம் அழிந்துப் போக இருக்கின்ற இந்த உலகில் இறைவனால் தடுக்கப்பட்ட தீமையான வழிகளில் மூழ்கித் திளைக்காமல் நம்பிக்கை கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாகவும், உற்றத் தோழர்களாகவும் மறுமை வாழ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாவும், ஏகஇறைவனை முறையாகத் தொழுது, இயன்றவரை ஹலால் – ஹராம் பேணி, நன்மைகளை ஏவித் தீமைகளைத் தடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் திருப்தியை அடைந்தவர்களாக வாழ்ந்து வந்தால் அவர்களுக்கு மறுமையில் நிம்மதியான வாழ்வை நிரந்தரமாக்கித் தருவதாக திருமறைக்குர்ஆன் நெடுகிலும் ஏகஇறைவன் வாக்களிக்கிறான்.

‘எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன்” ‘மனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி தரும் சொர்க்கத்து இன்பங்களை அறிய மாட்டார்கள்,, என்னும் திருக்குர்ஆன் 32:17 இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி 3244.

Continue reading

”அல்லாஹ்வு​க்காக அழகிய கடன் வழங்கும் திட்டம்

ஏகஇறைவனின் திருப்பெயரால்….
73:20. …தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூரி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

”இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் ‘சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்’ என்றார். கடன் கேட்டவர் ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!’ என்றார். ‘அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!’ என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் ‘பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் ‘நீர் கூறுவது உண்மையே!’ என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார்.

எந்த வாகனமும அவருக்குக் கிடைக்கவில்லை. உடனே, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பிறகு கடலுக்கு வந்து, ‘இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் பிணையாளி வேண்டுமென்றார்; நான் ‘அல்லாஹ்வே பிணைநிற்கப் போதுமானவன்!” என்றேன்; அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!” என்று கூறினேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் நீ அறிவாய்! எனவே, இதை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்!” என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார். அத்துடன் தம் ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தம் செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார். அப்போது, பணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். தம் குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார்…என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். நூல்:புகாரி 2291.
Continue reading

நன்றே செய்க! அதை இன்றே செய்க

ஏக இறைவனின் திருப்பெயரால்….

وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُواْ الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُواْ يَأْتِ بِكُمُ اللّهُ جَمِيعًا إِنَّ اللّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ 148

ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்!நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். அல்குர்ஆன்: 2.148


நற்செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

நற்செயல் புரிய வேண்டுமென்ற சிந்தனை மனதில் தோன்றியதுமே தாமதிக்காமல் செய்து முடித்திட முனைந்திட வேண்டும் தாமதித்தால் அதைத் தடுத்து நிருத்தி விடுவதற்காக ஷைத்தான் மனதில் பல விதமான ஊசலாட்டத்தை விதைத்திடுவான் காரணம் நற்செயல் புரிவதால் நன்மை எழுதப்பட்டு பாவம் குறைக்கப்பட்டு அனைவரும் சொர்க்கத்திற்கு செல்வார்கள் அதனால் நரகம் வெறிச்சோடிக் கிடக்கும் என்பதால் பாவம் குறைக்கப் படாமல் இருப்பதற்காக நற்செயலின் வாசலை ஷைத்தான் பூட்டி விடுவான்.

ஒருவர் தொழாதவறாக இருப்பார் தொழாமல் இருப்பது சரியல்ல தொழ வேண்டும் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே அதற்கடுத்த நேரத் தொழுகைக்கான அழைப்பொலியை எதிர்பார்த்து பள்ளிக்கு விரைந்திட வேண்டும்.

தொழக் கூடியவராக இருப்பார் ஆனால் வைகரைத் (ஃபஜ்ரு) தொழுகையை தொழாதவராக இருப்பார் மற்ற நேரத் தொழுகைகளை தொழுது கொண்டு ஃபஜ்ரை தொழாமல் இருப்பது சரியல்ல நாளை முதல் அதையும் தொழுவதற்கு தொடங்கிடுவோம் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே அலாரத்தை வைத்துக் கொண்டு உறக்கத்திலிருந்து எழுந்து தொழுதிட வேண்டும்.

இன்னாருக்கு இன்னத் தேவைக்காக இவ்வளவு கொடுத்து உதவிடுவோம் என்ற சிந்தனை மனதில் எழுந்;ததுமே தாமதிக்காமல் கொடுத்து உதவிட வேண்டும்

ஏழு நிலைகளை நீங்கள் அடைவதற்கு முன் நற்செயல்களைக் கொண்டு முந்திக்கொள்ளுங்கள்.

1- மறதியில் ஆழ்த்தும் வறுமை,

2- அநீதியிழைக்கத் தூன்டும் செல்வம்,

3- உடலில் கெடுதலை உண்டாக்கும் நோய்,

4- சொல்லை பலவீனப் படுத்தி விடும் முதுமை,

5- விரைந்து வரும் மரணம்,

6- தஜ்ஜாலின் வருகை,

7- இறுதி தீர்ப்பு நாள்,

என்று இதைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதி

Continue reading

மக்கள் நடமாடும் பகுதிகளில்

ஏகஇறைவனின் திருப்பெயரால்….

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்என்று கூறினார்கள். அப்போது மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக்கொள்கிறோம்என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆகவேண்டும் என்றிருந்தால், சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்என்று கூறினார்கள். மக்கள், ‘சாலையின் உரிமை என்ன? இறைத்தூதர் அவர்களே!என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும்,சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும் படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்என்று பதிலளித்தார்கள். ஆதார நூல்: புகாரி 6229,அறிவிப்பாளர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

  • அந்நியப் பெண்களைப் பார்க்காமல் பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும்,
  • பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ துன்பம் தராமலிருப்பதும்,
  • சலாமுக்கு பதிலுரைப்பதும்,
  • நன்மை புரியும் படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் அதன் உரிமைகளாகும்.

மேற்காணும் பெருமானாரின் நான்கு கட்டளைகளைப் பின்பற்ற முடியுமென்றால் மக்கள் நடமாடும்  பகுதிகளில் அமர்ந்துப் பேசுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை.

மேற்கானும் பெருமானாரின் நான்கு கட்டளைகளைப் பின்பற்ற முடியாதென்றால் மக்கள் நடமாடும்  பகுதிகளில் அமர்ந்துப் பேசுவதிலிருந்து ஒவ்வொருவரும் தவிர்ந்து கொள்ளுதல் நல்லது.

காரணம்

இன்று அதிகமான பிரச்சனைகள் குழப்பங்கள், பெண்களுக்கெதிரான அநீதிகள், போன்றவைகள் உருவாவதற்கு பெரும்பாலும் சாலை ஓரங்களில் நின்று கொண்டும், குறுகலான சாலைகளின் சிறிய பாலங்களின் மீது அமர்ந்து கொண்டும், டீ கடை, பெட்டிக்கடை வாசல்களில் நின்று கொண்டும்  அரட்டைகளிலும் , வீண் விவாதங்களிலும் ஈடுபடுவதே முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.
அரசியலைப் பற்றியோ, அல்லது ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பற்றியோ, புதிதாக ரிலீசானப் படத்தைப் பற்றியோ, ஊருக்குள் விமர்சனத்திற்குள்ளான சில குடும்பத்தவர்களைப் பற்ற்pயோ, காரசாரமாக பேசிக் கொண்டிருக்கையில் ஒவ்வொருவரும் தனது வாதம் வெல்ல வெண்டும் என்று கருத்துகளை எடுத்து வைப்பார்கள் இதுவே இறுதியில் அவர்களுடைய மத்தியில் கலகம் வெடித்து சண்டை மூண்டு விடும். அதன் பிறகு அது குடும்பச் சண்டையாக மாறும்.

வேலை வெட்டி இல்லாத இவர்களால் உருவான இந்தச் சண்டை அன்றாடம் கஸ்டப் பட்டு குடும்பத்தை காப்பாற்றும் பெரியவர்களுக்கு மத்தியில் பெரிய பிரச்சனையாக உருமாறி இறுதியில் அது அவர்களை ஜென்ம விரோதிகளாக மாற்றி விடும்.

இது ஒருப் புறம்

அடுத்தது பாதசாரிகளுக்கு இவர்களுடைய அரட்டைகளால் பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தும்

எவ்வாறு ?

பேச்சு ஒருப் பக்கம் நடந்து கொண்டிருக்கும்போதே அந்த வழியாக ஒருப் பெண் செல்ல நேரிட்டால் அந்தப்பெண் அவர்களை கடப்பதற்குள் அச்சத்தால் நடு நடுங்கி வியர்வையில் குளித்தவளாக அவர்களைக் கடந்து ஒருப் பெருமூச்சு விடுவாள். காரணம் இப்பெண்ணைக் கண்டதும் அவர்கள் பேசிக் கொண்டிருந்த டாப்பிக்கிலிருந்து மாறி இப்பெண்ணுடைய நடை உடை பாவனையை கிண்டலடிக்க ஆரம்பித்து விடுவார்கள் ஒருப் பெண் வீதியில் வந்து விட்டாலே எதையாவது கமென்ட் அடிக்க வேண்டும், அல்லது குறைந்தது விரசமாகப் பார்க்க வேண்டும் என்பது ஆண்களுடைய தார்மீக உரிமை போல் நிணைத்துக் கொண்டு பாதசாரிப் பெண்களை நிலைகுலையச் செய்து விடுகின்றனர் .

  • அந்நியப் பெண்களைப் பார்க்காமல் பார்வையைத் தாழ்த்திக் கொள்வது,

மக்கள் நடமாடும் பொது வழிகளில் அமர்ந்து தான் ஆகவேண்டும் எனும் நிலை வந்தால் அமரும் அந்த இடத்திற்கான உரிமைகளில் ஒன்றாக அந்நியப் பெண்களைப் பார்க்காமல் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும் அல்லாஹ்வின் சட்டத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.

எல்லாம் அறிந்த அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் 1400 வருடங்களுக்கு முன்பே ஆண்களைப் போல் பெண்களும் சுதந்திரமாக வீதியில் நடப்பதற்காக பெண்களை நோக்கும் ஆண்களுடையப் விரசப் பார்வையை தடைசெய்தான். இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய எண்ணற்ற சமஉரிமைகளில் இதுவும் போற்றத் தக்க உரிமையாகும்.

24:30. (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

24:31. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! ….

  • பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ துன்பம் தராமலிருப்பது,

மேற்குறிப்பிட்ட பொதுவழிகளில் ஒரு டாப்பிக் நடந்து கொண்டிருக்கம் போது அதிலிருப்பவருக்கு பிடிக்காத ஒருவர் அவ்வழியே செல்ல நேரிட்டால் அவரைப் பார்த்ததும் இவர் தனது மனதில் அவர் மீது உள்ள வெறுப்பைக் கொட்டுவதற்கு நண்பர்களுடனான தெரு வீதி அரட்டையை சாதகமாக்கிக் கொள்வார் அது இவரைப் பிடிக்காத அந்த பாதசாரிக்கு நெருடலை ஏற்படுத்தும் பலர் முன்னிலையில் சங்கட்டப்படுவார். இதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது அதனால் சொல்லால், செயலால் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாமலிருக்க வேண்டும் என்று சாலைகளில் அமரும்போது பிறர் கண்ணியம் கருதி பேணச் சொல்கிறது இஸ்லாம்.

  • சலாமுக்கு பதிலுரைப்பது,

 

பாதசாரிகளுக்கு சொல்லால் செயலால் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாமல் பொதுவழிகளில் இருந்து பேசவேண்டும் என்றால் அங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது போகின்ற வருகின்றவர்கள் கூறும் ஸலாமுக்கு அமர்நிதிருப்பவர்கள் பதில்ஸலாம்சொல்லிக்  கொண்டே  இருக்க வேண்டும் என்று பெருமானார்(ஸல்) அவர்கள் கட்டளைப் பிறப்பித்தார்கள் காரணம் படுஜோராக விவாதம் சூடுபிடித்துக் கொண்டிருக்கும்போது எதிரில் யாராவது ஸலாம் சொன்னால் பதில் ஸலாம் சொல்ல முடியாத அளவுக்கு விவேகமாக விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் பதில் சொல்ல விடாமல் ஷைத்தான் தடுப்பான். இதன் மூலமாக பாதசாரிகளுக்கும் அங்கு கூடிநின்று அரட்டையில் ஈடுபடுபவர்களுக்கும் மத்தியில் பிணக்கு ஏற்படும்.

ஸலாம் சகோதரத்துவத்தை இணைக்கும் பாலமாகும். ஸலாம் இல்லை என்றால் சகோதரத்துவம் முறிந்து விடும் அதனால் ஸலாம் என்ற அமைதி அமர்ந்திருப்பவர்கள் மீதும், பாதசாரிகளின் மீதும் பரஸ்பரம் தவழும் போது தாமாகப் பிரச்சனைகளும், பிணக்குகளும் பறந்து விடும்.

  • நன்மை புரியும் படி கட்டளையிடுவதும்,
  • தீமையிலிருந்து தடுப்பதும் அதன் உரிமைகளாகும்.

 

இவ்வுலகில் ஒருவர் வாழ்ந்த காலத்தில் அவரால் இன்னொருவர் பலனடைந்ததாக இருக்க வேண்டும்

.மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும்,ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.;….22:40

என்ற மேற்கானும் திருமறைவசனத்தின் படி நன்மையை ஏவித்தீமையைத் தடுக்கும் ஒருக் கூட்டத்தினர் உலகில் இல்லாவிடில் தீமைகள் மேலோங்கி விடும் இறைவன் கூறியதுப்போன்று மத பாகுபாடின்றி அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அகற்றப்பட்டு இறைமறுப்பாளர்கள் மட்டும் எஞ்சி இருப்பர். அவர்கள் மக்களை கற்காலத்திற்கு அனுப்பி விடுவர் மனிதனை மனிதன் அடித்து உண்ணும் காலம் வந்துவிடும். அதனால் ஓரிடத்தில் குழுவாக சிலர் அமர்ந்து விட்டால் அவ்விடத்தில் தங்களுக்கும் பிற மக்களுக்கும் பலன் தரக்கூடிய நல்ல விஷயங்களை,ஆன்மீக செய்திகளை அதிகமாகப் பேசவேண்டும் இதனால் நம்மைப் போன்றே பிறரும் நல்லறங்கள் புரிவதற்கு அது வழிகோலும். அதுப்போன்று நல்ல விஷயங்களை உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தால் சில செய்திகளை தாங்களும் செவியுறுவதற்காக பாதசாரிகளும் உட்கார்ந்து விடுவார்கள்.

மேற்காணும் பெருமானாரின் நான்கு கட்டளைகளைப் பின்பற்ற முடியுமென்றால் மக்கள் நடமாடும்  பகுதிகளில் அமர்ந்துப் பேசுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை.

மேற்கானும் பெருமானாரின் நான்கு கட்டளைகளைப் பின்பற்ற முடியாதென்றால் மக்கள் நடமாடும்  பகுதிகளில் அமர்ந்துப் பேசுவதிலிருந்து ஒவ்வொருவரும் தவிர்ந்து கொள்ளுதல் நல்லது.

அத்துடன் இது தேர்தல் நேரம் என்பதால் மிகவும் ஜாக்ரதையாக நடந்து கொள்ளுங்கள் வேட்பாளர்கள் என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றவர்களை நம்பாதீர்கள் அவர்களுக்காக வக்காலத்து வாங்கிப் பேசாதீர்கள் வேட்பாளர்கள் அனைவரும் வேடதாரிகள்.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

Thanks:அதிரை ஏ.எம்.பாரூக்

thanks :Masood