அகில உலக மக்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் அல்குர்ஆன் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறியுள்ள காலத்தில் பல அறிஞர்களை சிந்திக்கவும், ஆராய்ந்து பார்க்கவும் வைத்துள்ளது. அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள கருவியலை ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள் மனிதன் எப்படி படைக்கப்படுகிறான் என்பதனை ஆய்வு செய்தனர். வல்ல இறைவன் தன் வல்லமையை புனித குர்ஆனில் மனிதன் படைக்கப்படும் ஒவ்வொரு அசைவுகளின் நிலைப்பாட்டை மிக தெள்ளத் தெளிவாகவும், துல்லியமாகவும் விளக்கியுள்ளான்.
முதன் முதலில் ஆதி பிதா ஆதம்(அலை) அவர்களை “”….களிமண்ணிலிருந்து சத்தினால் படைத்தோம்” 23:12.
“நாம் மனிதனை ஓர் பாதுகாப்பான (கர்ப்பப்பை) இடத்தில் இந்திரியத் துளியாக வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை “அலக்”என்ற நிலையில் ஆக்கினோம். பின்னர் அந்த அலக்கை ஒரு தசை பிண்டமாக்கினோம். பின்னர் அந்த எலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் அதனை ஓர் படைப்பாக (மனிதனாக) ஆக்கினோம். (23:13,14)
இது 1432 ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானம் வளர்ச்சி பெறாத காலத்தில் அல்லாஹ் இறக்கிய அல்குர்ஆனில் கூறப்படும் வசனமாகும். எந்த மதங்களின் வேதங்களிலும் மனிதனின் படைப்பைப் பற்றி மிகத் துல்லியமாகக் கூறப்பட வில்லை. அல்லாஹ்வின் உயர் நெறிநூல் மூலமே மனிதன் உருவாவதை மனிதனே தெரிந்து கொண்டான்; ஆராய்ச்சியும் மேற்கொண்டான்.
Filed under: இஸ்லாம் | 2 Comments »