அகிலம் காணா அதிசய மனிதர்!!!

நூற்றாண்டுகளில் சாதிக்க முடியாத அரும் பெரும் சாதனையை இருபத்து மூன்றே ஆண்டுகளில் சாதித்து உலகையே வியப்பிலாழ்த்திய அதிசய மனிதரை பற்றி அறிந்திருக்கிறீர்களா? இதோ வரலாறு காணாத அந்த மாமனிதரை தெறிந்துகொள்ளுங்கள்.

இவர் எழுத படிக்கத் தெரியாதவர். ஓர் ஏழை! அனாதை!! ஆதரவற்றவர்!!! உற்றார் உறவினரால் தூற்றப்பட்டவர்! துரத்தப்பட்டவர்!! கடைசியாக பிறந்தகத்தால் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டவர். ஆனால் எதிரிகளால் கூட நம்பிக்கையாளர் அல்-அமீன்-நேர்மையாளர், அஸ்-ஸாதிக்-உண்மையாளர் எனப்போற்றப்பட்டவர். உலகத்திலேயே தோன்றிய தீர்கதரிசிகள் மதபோதகர்கள் அனைவராலும், மகத்தான வெற்றி கண்டவர் என உலகே பெருமைபட்ட மாமனிதர்.

உலகம் இருன்டு கிடந்தது. மனித குலம் இருலிலே தத்தளித்தது. அழிவென்னும் அதல பாதாளத்தை நோக்கி அது வேகமாக சென்று கொண்டிருந்தது.

நீதி, நெறி, சுதந்திரம் அனைத்தம் எங்கோ மறைந்து விட்டன. மனித உரிமையும் கண்ணியமும், கட்டுப்பாடும் கொடுங்கோலர்களின் காலிலே மிதியுன்டன, பலவீனனை அடக்கியாண்டான் ஏழை பணக்காரனை வணங்கினான், சிறிய இனம் பெரிய இனதின் அடிமை.

தடிஎடுத்தவன் தம்பிரான்! சட்டம், ஒழுக்கம், குடும்ப வாழ்வு இவையனைத்தும் மறக்கப்பட்டுவிட்டன. பெண்ணினம் ஓடுக்கப்பட்டன. பிறக்கும் பெண் குழந்தைகள் உயிரோடு புதைக்கப்பட்டன. பங்கமா பாதகங்கள் தலைவிரித்தாடின. கொடுமைகளால் நசுக்குண்டு விழி பிதுங்கி போக்கிடமற்றுத் தடுமாறிய ஆயிரமாயிரம் மக்களின் ஓலங்கள் கேட்பதற்கு நாதியில்லை!
கி.பி. ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உலகமிருந்த இந்த பரிதாபகரமான நிலையிலேதான இறைதூதை ஏற்று ஹிரா மலைகுகையிலிருந்து வெளிவந்தார் அந்த அதிசய மனிதர். அவர் தான் முஹம்மது என்னும் இறைதூதர்! அவர்மனித குலத்துக்கு விடுத்த நற்செய்தி இதுதான்:-

இறைவன் ஒருவனே அவனை தவிர வேறு எவரையும் வணங்க கூடாது. மக்களனைவரும் சகோதரர்கள். நிறத்தாலம், மொழியாலும் ஏற்றத்தபழ்வு கிடையாது. அனைவரம் அந்த இறைவனுக்கே அடிபணி வேண்டும், அவனும் அவனத இறைதூதரும் காட்டிய வழியில் நடக்கவேண்டும்.

வரலாறுகாணாத அளவில் அரபுநாடு முழுவதும் அணிதிரண்டு அவரை எதிர்த்தது. சரித்திரத்தில் எந்த மனிதரும் காணாத எதிர்ப்பையும் கொடுமைகளையும் பெருமானார்(ஸல்) எதிர் நோக்க வேண்டி வந்தது. இருபத்து மூன்றாண்டுகள் இடைவிடாத போராட்டம்.கடைசியில் ஒரே சக்தியாக திரண்ட அரபுநாடு, அவர்களது சுட்டுவிரலிலே அசைந்தாடியது.

இந்த அற்புதம் எப்படி நிகழ்ந்தது? மிகப்பெரிய வல்லரசுகளால் பல்லாண்டுகளில் சாதிக்கமுடியாத ஓரு காரியத்தை அனாதையும் ஏழையுமான ஓரு தன்னந்தனி மனிதரால் எப்படி சாதிக்க முடிந்தது? வரலாற்றாசிரியர் வில்லியம் மூர் சொல்லுகிறார்:-

சர்வசக்தியும் படைத்த இறைவன் தனக்கு துனையாக நிற்கிறான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை அவருக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்க முடியாது. இதுவே அவர் இறையருள் பெற்ற ஓர் இறைத்தூதர் என்பதற்கு சான்றாகும்.

இவ்வளவு பெரிய மாமனிதரை இறைதூதராகவும், வாழ்வின் வழிகாட்டியாகவும் கொண்ட முஸ்லீம்கள் அவரை ஓரு மகானாகக் கொண்டாடுகிறார்களே தவிர அவரை சரியாக புரிந்து கொள்ளவுமில்லை, அவர்களை பின்னற்றுவதுமில்லை. அவர்கள் தன்னை பற்றி சொல்லாதவற்றை கூறி அவர்களுக்கு அளிக்கக்கூடாத அந்தஸ்துகளை அளித்து, அவர்கள் தடுத்த தெய்வீகத் தன்மைகளை வழங்கி, அவர்கள் பெயரால் பொய்களைப் புனைந்து மாசுபடுத்தி வரும் இஸ்லாமியர்களின் அவல நிலைகளைக்கான இதயம் வெடித்துவிடும்போலுள்ளது.

மௌலிது:
புகழைப் பாடுகிறோம் எனக்கூறி அவாகள் மீது மௌலிது என்னும் பெயரால் குர்ஆன், ஹதீஸுக்கு முரணான பல சக்திகளை வாரி இறைத்து, பெருமானாரின் போதனைக்கெதிராக ஷிர்க்கான – பித்அத்தான – நச்சுக்கருத்துகளை திணித்து இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுக்கு இல்லாத அந்தஸ்தை வழங்கி ஒரு வணக்கமாகவே கருதி புனிதவிழாவாகக் கொண்டாடிவருகின்றனர். அதற்கென விசேச பந்தல்! மலர் தோரணங்கள்! பன்னீர் சந்தன வரவேற்புகள்! புத்தாடை புனைந்து ஊரே வியக்கும் விருந்து வைபவங்கள்! இனிப்பு நேர்ச்சைகள்! சினிமாமெட்டுகளில் வகைவகையாய் இசைக்கப்படும் அப்பாடல்களை ஓளுவுடன் தலையில் தொப்பியணிந்து பக்திப் பரவசத்தோடு ஓதும் கண்கொள்ளாக் காட்சிகள் வியப்பூட்டுட்டும் ஒரு வினோத வழிபாடாகவே தெரியும்.

மீலாது விழா:
மீலாதுவிழா கொண்டாடுகிறேம் எனப் பறைசாற்றி மாற்று மதத்தலைவர்களை மேடைக்கழைத்து அவர்களையே துதி பாடி, பொன்னாடை போத்தி, மலர் மாலை அணிவித்து, காலில் விழுந்து வணங்கி கடைசியில் பெருமானாரின் பெருவாழ்வை மறந்து நடக்கும் விழாவாகத்தான் காணமுடிகிறது. அந்த விழாக்களின் மூலம் அவர்களின் ஸுன்னத்துகளில் ஒன்றையேனும் பின்னற்றப்படவோ, அவர்களின் வாழ்க்கை நெறிகளை கடைப்பிடிக்கப்படவோ செய்யப்படுவதில்லை பெருமானாருக்குப் பிறந்தநாள் கொண்டாடுவதே அவர்களுக்கு மாறுசெய்வதாகும். அவர்களின் பிறந்தநாள் விழா அவர்களின் காலத்திலோ, அவாகளை பின்பற்றிய நெறிவழுவா ஸஹாபாக்கள், அவர்களையடுத்த தாபியீன்கள், அவர்களுக்கும் பின்னர் வந்த எந்த முஸ்லிம் ஆட்சியாளர்களாலும், தலைவர்களாலும் கொண்டாடியதாக வரலாறில்லை. இது சென்ற நூற்றாண்டில் அரங்கேற்றப்பட்ட நவீனச் சடங்காகும்

வரையறை மீறிப்புகழ்தல்!
அவர்களை போற்றிப்புகழ்கிறோம் எனக்கூறி புராணங்களையே மிஞ்சிவிடும் அளவிற்கு எங்கோ சென்றுவிட்டார்கள் நமது முஸ்லிம் பக்தர்கள். இதோ நம் கவனத்திற்கு சில:-

1. நபி(ஸல்) ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். முதல் மனிதன் ஆதத்தை இறைவன் களிமண்ணால் படைத்தான் என்பதற்கு 32:7, 35:11 போன்ற ஏராளமான குர்ஆன் வசனங்கள் உள்ளன. இந்த வசனங்களை ஆராய்ந்தால் மனிதனின் துவக்கமே களிமண்தான் என தெளிவாகிறது. இவ்வாறிருக்க முதலில் அல்லாஹ் முஹம்மதின் ஒளியை படைத்தான். அதிலிருந்தே எல்லாப்படைப்புகளையும் படைத்தான் என்பது குர்ஆனுக்கு மாற்றமாகும். அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டார்கள் என்பதற்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரமில்லை. முஸ்னது அப்துர் ரஸ்ஸாக் என்ற நூலில் குறிப்பிடப்பட்டதாக பரலேவி ஆலிம்கள் கூறுவது ஆதாரமற்ற பொய்யாகும்.
2. நபி(ஸல்) அவர்கள் இருட்டில் நடந்தால் ஒளி வீசும்
3. நபி(ஸல்) அவர்கள் பிறக்கும் போதே கத்னா செய்யப்பட்டே பிறந்தார்கள்.
4. நபி(ஸல்) அவர்கள் வெயிலில் நடந்தால் நிழல் விழாது.
5. நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் கொட்டாவி விட்டதே இல்லை.
6. நபி(ஸல்) அவர்களின் உடம்பில் ஒரு ஈ கூட உட்கார்ந்தது இல்லை.
7. நபி(ஸல்) அவர்கள் நடந்தால் அவர்களின் பாதம் தரையில் பட்டதில்லை.
8. நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னால் கப்ரிலிருந்து பதில் வரும்.
9. நபி(ஸல்) அவர்களின் புகழ் பாடினால் அவர்கள் அங்கே ஆஜராவார்கள்.
10. நபி(ஸல்) அவர்களின் மலஜலம் சுத்தமானது. (அசுத்தம் – நஜீஸ் – அல்ல)
11. நபி(ஸல்) அவர்கள் பிறப்பு உறுப்பு வழியாக பிறக்கவில்லை.
12. நபி(ஸல்) அவர்களை கருவற்றபோது அவர்களின் தாயின் வயிறு பெருக்கவில்லை.
13. நபி(ஸல்) அவர்களின் தாய் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகப் பெற்றார்கள்.
14. நபி(ஸல்) அவர்கள் ஸுஜுது செய்தவாறே பிறந்தார்கள்
15. நபி(ஸல்) அவர்களிடமே நம் தேவைகளை (துஆ) கேட்பது.

இவ்வாறு வரம்பு மீறிப்புகழ்வதற்கோ, அபரிமிதமான அந்தஸ்த்தை கொடுத்துப் போற்றுவதற்கோ குர்ஆனிலோ ஹதீஸிலோ எவ்வித ஆதாரமுமில்லை

நபிகள் நாயகத்தின் வரலாறு அவர்கள் நபியாக வாழ்ந்த (40 முதல் 63 வரை) 23 ஆண்டுகள் தான் தெளிவாகப் பதியப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் தான் அவர்களை ஒரு இறை தூதர் என உலகம் உற்று நோக்கத் தொடங்கியது. அதற்கு முன் அவர்கள் ஒரு நபியாக வருவார்கள் என யாரும் கூர்ந்து கவனிக்கவோ வரலாற்றை பதிவுசெய்யவோ இல்லை. அவர்களின் வரலாற்றை பதிவு செய்தோர் யாவரும் அவர்களின் காலத்திற்க்குப் பல்லாண்டுகளுக்குப்பின் வாழ்ந்தோரேயாவர். எனவே நுபுவ்வத்திற்கு முந்தைய கால வரலாற்றை மிகவும் துல்லியமாக கொள்வதற்கில்லை. எனினும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளையே நம்பத்தக்கவை-களாகக் கொள்ளவேண்டும்.

அடுத்து, நபி பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்வில் நாம் பெறவேண்டிய பாடங்களும் படிப்பினைகளும் ஏராளம் உள்ளன. அவற்றை யாரும் ஊன்றிக்கவனிப்பதில்லை. மேலெழுந்தவாரியாகத் தெரிந்த கொண்டு அவர்களைப் புரிந்து கொண்டதாகவோ, பின்பற்றுவதாகவொ கூறுவதில் அர்த்தமில்லை. அது ஒரு உண்மை முஸ்லிமின் இலக்கணமுமல்ல.
இன்றைய உலக தலைவர்களை வைத்து ஒப்பிடும்போது தான் அவர்களின் அருமையும் பெருமையும் நமக்கு புரியவரும். அவர்களது வாழ்வின் எந்தபகுதியை புரட்டினாலும் எந்தவொரு மாசுவும் மறுவும் காண முடியாது.

புகழ்:
புகழின் உச்சியிலிருந்த போதும் பெயரிலேயே புகழுக்குறியவர் என சுட்டப்பட்டபோதும் அவர்கள் தமக்குச் சூட்டப்படும் எந்த புகழையும் விரும்பவில்லை. இத்தனைக்கும் அவர்கள் ஒரு நாட்டின் மாமன்னர். அரசியலிலும் ஆன்மீகத்திலும் மிகப்பெரிய அந்தஸ்த்தைப் பெற்றவர். பாரசீக பேரரசும் ரோமானிய வல்லரசும் அவர்களின் பெயரைகேட்ட மாத்திரத்திலேயே நடுநடுங்கியது. முஹம்மதின் படைகளை எதிர் நோக்க திராணியற்றோராய் தொடை நடுங்கிநின்றனர். ஏனெனில் அவாகள் கொல்வதற்கும், கொல்லப்படுவதற்கும் எப்பொதும் தயார் நிவையிலே இருந்தனர். உயிரைத் துச்சமாக மதித்தனர்.

இன்றைய அரசியல்வாதிகளின் கால்களில் விழுந்த வணங்கி வழிபட்டதைப்போன்றே அன்றைய மாமன்னர்களின் காலடியிலே தொழுதுவணங்கினர். எமன் நாட்டு தூதுவராகச்சென்று திரும்பிய முஆது இப்னு ஜபல்(ரலி) அவர்கள் தாம் பல நாட்டு மக்கள் மன்னர்களின் காலடியில் வணங்கி வழிபட்டதை கண்டதாகவும் அவர்களைவிட எத்தனையொ மடங்கு மேலான உங்களின் கால்களில் விழுந்த மரியாதை செய்வதை விரும்புவதாகவும் நபிகள் நாயகத்திடம் தெரிவித்த போது அவ்வாறு செய்ய வேண்டாம் என தடுத்துவிட்டு கூறினார்கள். ஒருமனிதன் இன்னொருமனிதனுக்கு சுஜுது செய்யவே கூடாது. அப்படி ஒரு அனுமதி இருக்குமாயின் ஒரு மனைவி தன் கணவனுக்கு சுஜுது செய்ய வேண்டுமென பணிந்திருப்பென்.

கிறித்தவர்கள் மரியமுடைய மகனை (ஈஸா நபியை) அளவுக்கதிகமாகப் புகழ்ந்து மரியாதை செய்தது போல் எனக்கும் செய்ய வேண்டாம். நான் அல்லாஹ்வின் அடிமைதான். எனவே என்னை அவனின் அடிமை என்றும் அவனது தூதரென்றும் மட்டுமே அழையுங்கள் என்று கூறி காலில் விழும் கலாச்சாரத்திற்கு அன்றே சாவு மணி அடித்தார்கள். அதுமட்டுமல்லாது ஏதேனும் சபைகளிலே யாரேனும் எழுந்து நின்று மரியாதை செய்வதைகூட அவர்கள் விரும்புவதில்லை. அவ்வாறு செய்யக்கண்டால் வேண்டாம் என கடுமையாக எச்சரித்துமுள்ளார்கள்.

ஒருமுறை திருமணமொன்றில் கவிதைகளைப்பாடிக் கொண்டிருந்த சிறுமிகள் பெருமானார்(ஸல்) அவர்களைக் கண்டதும் “ஃபீனா நபிய்யுன் யஃலமு மாஃபீ கதின்” – நாளைய நிகழ்ச்சிகளை அறியும் இறைதூதர் எங்களிலே உள்ளார் எனப்புகழ்ந்து பாடத்தொடங்கியதும், நிறுத்துங்கள்! அவ்வாரு பாட வேண்டாம். முதலில் பாடிய அடிகளையே பாடுங்கள் எனக் கடித்து கொண்டார்கள். ஆண்டவன் அறிவித்தால் அன்றி தமக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்தார்கள்.

தமது மகனார் இப்றாஹீம் மறைந்தபோத சூரிய கிரகணம் ஏற்பட்டது. அவர்களின் இறப்பிற்காகத்தான் கிரகணமே நிகழ்ந்தது எனப் பொய்யான புகழுரைகளை கற்பித்தபோது யாருடைய இறப்பிற்காகவும் இவ்வாறு நிகழ்வதில்லை என சோகத்தின் விழிம்பிற்குச் சென்ற போதும் பெருமானார்(ஸல்) மக்களை கண்டிக்கத்தவறவில்லை. மதவாதிகள் இது போன்றவற்றை தமக்கு சாதகமாக பயனபடுத்திவருவதை எங்கும் காண முடிகிறது. இவ்வாரு சிறு புகழைக்கூட விரும்பாத அதிசய மனிதர் அவர்.

பதவி:
உலகிலே ஆன்மிகத்திலும் அரசியலிலும் செல்வத்திலும் செல்வாக்கிலும் உயர்ந்து நினற போதும் தனக்கென பெருமையோ, வசதி வாய்ப்புகளையோ தனித்தன்மையையோ விரும்பாதவர். அவர் மாளிகையில் வாழவில்லை. மண்குடிசையில் வாழ்ந்தனர்.

இன்று ஆன்மீகத்திலும், அரசியலிலும், செல்வத்திலும் உயர் பதவி வகிப்போர் சிவப்பு விரிப்பில் வலம் வருவதையும் பூமாலைகள், பொன்னாடைகள் போர்த்தப்பட்டு முடிசூடா மன்னர்களைப் போல் பவனிவருவதையும், பதவி வகிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே கோடிக்கு அதிபதியாகி தலைநிமிர்ந்து உலா வருவதையும் காண முடிகிறதென்றால் நாட்டின் உயர் பதவி வகிக்கும் மானில மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் என்னென்பது? நாற்பதாவது வயது வரை கோடீசுவரராக வாழ்ந்துவிட்டு தன்னை நபி நபியாக அறிவித்தது முதல் நாட்டின் அதிபதியாக ஆட்சி நடத்தியதுவரை

உலகிலெ யாருமே வாழ்ந்து விடாத அளவுக்கு ஏழையாக வாழ்ந்தார் அவர்களின் பேரும் செல்வம் இன்றைய அரசியல்வாதிகள் போல் பொது வாழ்வில் சம்பாதித்தவை அல்ல. கடின உழைப்பால் வாணிபத்தில் சம்பாதித்தவை. உயர்குலத்தில் பிறந்து வசதியான குடும்பத்தில் வாழ்ந்தும், அணிந்த ஆடையுடன் நாடுறந்தார். அத்தனையும் துறந்துவிட்டு அகதியாக மதீனா மதினா வந்து சேர்ந்தார்.

எளிமை:
பெருமானார்(ஸல்) அவாகள் மிகவும் எளிமையாக வாழ்ந்தார்கள். தம் ஆடைகளைத் தாமே துவைத்தார்கள். கிழிந்த ஆடைகளை தைத்தார்கள். வீட்டை பெருக்குவதை, காலனிகளைப் பழுதுபார்ப்பது, ஒட்டகத்திற்கு தீனி போடுவது, பால்கறப்பது, வீட்டு மராமத்து வேலைகளைப் பார்ப்பது, சமையலில் மனைவிமார்களுக்கு உதவுவது போன்ற அனைத்து வேலைகளையும் தாமே முன் வந்த செய்தார்கள்.

குபா பள்ளிவாசல், மஸ்ஜிதுந்நபவீ கட்டிடப்பணிகளில் தம் தோழர்களுடன் கல், மண் முதலியவற்றை தம் தோழ்களில் சுமந்து வந்தார்கள். அகழ்போரில் அகழும் வெட்டினார்கள். ஒருசமயம் காட்டில் தோழர்கள் சமையல் வேலைகளில் ஈடுபட்டபோது இவர்கள் தம் பங்கிற்காக விறகு சேகரித்து வந்தார்கள்

ஒரு சமயம் அடிமைப் பெண்ணொருத்திக்கு இயலாதபோது மாவரைத்துக் கொடுக்கவும், அடிமைக்கிழவர் ஒருவர் கைநடுங்க தண்ணீர் இறைப்பதைக் கண்டு அவருக்கு உதவிடவும் அவரது தோட்ட வேலைகளை செய்து கொடுக்கவும் செய்தார்கள். சிறுவன் ஒருவன் கழுத்தை முறிக்கும் பெரும் சுமையை தாங்காது துடித்தபோது அதை தம் தோளிலே சுமந்த அவனது இடம்வரை கொண்ட சென்று கொடுத்து உதவினார்கள். மக்களின் தலைவர் மக்களின் தொண்டர் என்பதை உலகுக்கு உணர்த்தினார்கள்.

அடக்கம்:
ஒருநாள் அவர்கள் முன் ஒருவர் அழைத்தவரப்பட்டார். அவர் தம்மை பார்த்து ஒதுங்குவதையும் நடுங்குவதையும் கண்ட நபி அவர்கள், அஞ்ச வேண்டியதில்லையென்றும் தாம் அரசர் அல்ல என்றும் தாம் காய்ந்த ரொட்டியை உண்ணும் ஒரு ஏழைப்பெண்ணின் மகன் என்றும் நானும் உங்களை போன்ற சாதாரண மனிதன் தாம் என்றும் கூறி அரவணைத்து நின்றார்கள்

வறுமை:
சகல வசதிகளைப் பெற்றும் வருமையின் உச்சியில் செம்மை கண்டார்கள். அவர்களுக்கு பசியும் பட்டினியும் பழக்கமானது தான். அல்லாஹ்வின் தூதராகி மன்னர் மன்னராய் மாறியபோதும் கூட ஒருநாளும் வயிறார உண்டது கிடையாது. சில வேலைகளில் அவர்கள் பசித்திருப்பதைப் பார்த்து நான் அழுதுவிடுவேன் என்கிறார்கள் அன்னை ஆயிஷா அவர்கள்.

ஒருநாள் அருமை மகளார் பாத்திமா(ரலி) அவர்கள் ஒரு ரொட்டி துண்டை தந்தையாரிடம் கொடுத்து நான் செய்த ஒரே ரொட்டியில் உங்களுக்கும் ஒரு துண்டு கொண்டு வந்தேன் என்று கூறினார்கள். அதனை உண்டு கொண்டெ அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். “மூன்று நாட்களுக்குப் பிறகு உம் தந்தையின் வாய்க்குள் செல்லும் முதல் உணவு இதுதானம்மா” என்று.

நபியாகிய பின் தொடர்ந்து மூன்று நாட்கள் கோதுமை ரொட்டி உண்டது கிடையாது. ஒரு நாள் உண்டால் மறுநாள் பட்டினி. இப்படித்தான் அவர்களின் இறுதிவரை அமைந்திருந்தது. காலையில் உண்டால் மாலையில் சாப்பிடுவது கிடையாது. நோன்பு வைக்கும் போதுதான் ஏதாவது உணவு அருந்துவார்கள். நோன்பு திறக்கும்போது வெறும் தண்ணீர் மட்டுமே குடிப்பார்கள்.

பொழுது விடிந்ததும் அவர்கள் அருந்துவதற்கு ஏதாவது உணவு இருக்கிறதா? என்று கேட்பார்கள். உணவு ஒன்றும் இல்லை என்று கூறப்பட்டால் அப்படியே நோன்பு வைத்தக் கொண்டு விடுவார்கள்.

ஆயிஷா(ரலி) கூறினார்கள் நாற்பது நாட்கள் வரை எங்களது வீட்டில் அடுப்பு எரியாமலும் விளக்கு எரியாமலும் இருந்ததுண்டு என்று. அப்படியானால் என்னதான் சாப்பிட்டீர்கள? என்று கேட்டபோது பேரீத்தப்பழமும் தண்ணீரும் தான் என்று அவாகள் பதில் கூறினார்கள்.

பெருமானார்(ஸல்) அவர்கள் மரணித்த இரவு ஆயிஷா நாயகியின் வீட்டில் விளக்கில்லை. இருட்டாகவே இருந்தது. விளக்கெரிப்பதற்கு அங்கு எண்ணெயில்லை. மற்ற மனைவியரின் வீடுகளில் கேட்டனுப்பியபோதும் அங்கும் இல்லையென்றே பதில் வந்தது. காரணம் கேட்டபோது எண்ணெய் இருந்திருந்தால் அதை சமயலுக்கு பயன்படுத்தியிருப்போமே என்று பதில் சொன்னார்கள் அன்னையர் அனைவரும். மாமன்னரின் மரணத்தில் கூட விளக்கில்லையென்றால் எப்படிப்பட்ட வாழ்வு வாழ்ந்துள்ளார்கள்?

வீடு:
களி மண்ணாலும் பேரீத்த ஓலைகளாலும் வேயப்பட்ட சிறிய அறையே அவர்களின் வீடு. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இரவு வேளையில் நான் ஜனாஸாவைப் போல குறுக்கே படுத்துக்கிடப்பேன். பெருமானார்(ஸல்) தொழுகையில் ஸஜ்தா செய்யும் போது கையினால் குத்துவார்கள். நான் காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸுஜுதுக்கு வரும் போதே நீங்கள் காலை மடக்கிக் கொள்ளலாமே எனக்கேட்டபோது, அவர்கள் சொன்னார்கள்:-

‘வல்புயூத்து யவ்மயிதின் லைஸ ஃபீஹா மிஸ்பாஹுன்’
அந்நாளில் வீடுகளில் விளக்குகளே இருந்ததில்லையே என்று.

வீட்டின் அளவே நான்கிற்கு இரண்டடி என்ற அளவில் தான் அமைந்திருக்கும் அவ்வளவு சிறியது!.

படுக்கை, தலையணை:
ஒரு பாயும் ஒரு தலையணையும் பேரீத்தம் பழ நாரினால் வேயப்பட்ட ஒரு கட்டிலும் தான் வீட்டுத் தளவாடங்கள். தலையணையோ பேரீத்தமர இலைதழைகளால் திணிக்கப்பட்டது. அவர்கள் கட்டிலில் உறங்கி எழுந்தால் சிவந்த மேனியில் கயிறுகளின் தடயங்களைக் காணலாம். ஒருமுறை உமர் ஃபாரூக்(ரலி) அவர்கள் பெருமானாரின் இல்லம் சென்றபோது அழுதுவிட்டார்கள். அதைபார்த்த பெருமானார்(ஸல்) அவர்கள் ஏன் அழுகிறீர்கள்? எனக்கேட்டபோது பெருமானாரின் பசுமேனியில் தடம்பதித்த பரும் கயிற்றுக் கட்டிலை சுட்டிக் காட்டி இதுவே என்றார்கள். நான் சிறிதுகாலம் மர நிழலில் ஓய்வெடுத்துச் செல்லும் பயணி எனக்கெதற்கு கொகுசான வாழ்வு என்றார்கள்.

மற்றொருமுறை இப்னு உமர்(ரலி) அவர்கள் தங்களுக்கு நாங்கள் மென்மையான படுக்கையோன்று தயார் செய்து கொண்டு வரட்டுமா? எனக்கெட்டபோது இந்த உலகத்திற்கும் எனக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? மறுமையை நோக்கிப் பயணம் செய்யும் பயணி என்றார்கள்.

ஆடை:
பெரும்பாலான நேரங்களில் தோள் புஜம் திறந்திருக்குமளவுக்கு அவர்கள் ஆடையணிந்திருந்தார்கள். ஒரே ஒரு போர்வை தான் அவர்களின் ஆடை. ஒரே ஒரு ஜுப்பா தான் அவர்களின் விசேச ஆடை. அது தான் ஜும்மாவுக்கும், பெருநாளைக்கும், வெளிநாட்டுக்காரர்களை வரவேற்பதற்கும் பயன் படுத்துவார்கள். ஸஜ்தா செய்யும் போது அவர்களின் அக்குள் தெரியுமளவுக்கு தொளதொளப்பானது.

பெரும்பாலும் நாயகத் தோழர்கள் ஒரே ஒரு ஆடையைத்தான் பயன் படுத்தியுள்ளார்கள். ஒரு நாயகத்தோழர் என்னிடம் ஒரே ஒரு ஆடைதான் உள்ளது அதை இடுப்பில் கட்டடிக்கொள்ளவா? தோளில் போட்டுக் கொள்ளவா? என வினவிய போது, பெரிதாக இருந்தால் தோளில் போட்டுக் கொள்ளுங்கள், சிறிதாக இருந்தால் இடுப்பில் கட்டிக்கொள்ளுங்கள் எனச்சொல்லிவிட்டு யாரிடம்தான் இரண்டு ஆடைகள் உள்ளன? எனக் கேட்டார்கள்.

உலகில் தோன்றிய அத்தனை தலைவர்களும் மாவாதிகளும் தங்களை பின்பற்றியவர்களை தொண்டர்கள், சீடர்கள் என அழைத்தார்கள். ஆனால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மட்டுமே அவர்களை தோழர்கள் என அழைத்தார்கள். ஆண்டான், அடிமை என்ற பேதம் நம்மில் கிடையாது என முழங்கினார்கள்.

கடைசி நாட்கள்:
ஒவ்வொரு கொள்கைகளையும் தத்துவங்களையும் சொன்னவர் பெயராலே அவை அழிக்கப்பட்டன. அவர்களையே சமாதிகளாக்கி வழிபடத்தொடங்கினர். அவர்களுக்கு உருவப்படங்கள் சிலைகள் மலர் வளையங்கள் என எத்தனையோ வழிபாடுகள்.

உருவப்படங்களோ நாயோ இருக்கும் வீட்டில் அல்லாஹ்வின் அமரர்கள் வரமாட்டார்கள் எனக் கூறி தனக்கு படம்கூட வரையக்கூடாது என மிகுந்த எச்சரிக்கை செய்துள்ளார்கள். இறப்பதற்க்கு ஐந்து நாட்களுக்கு முன், இறைவா! எனது சமாதியை வணங்கி வழிபடக்கூடிய வணக்கஸ்தலமாக ஆக்கிவிடாதே என துஆ செய்தார்கள். பின்னர் தம்மை சுற்றியுள்ள மக்களிடம், என் சமாதியை வணக்கஸ்தலமாக ஆக்கிவிடாதீர்கள்! தங்களின் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணங்கி வழிபடும் இடங்களாக மாற்றிய யூத கிறித்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! எனக்கூறி எச்சரித்தார்கள்.

அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்:
கடைசி வேளையில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவ்வாறு மட்டும் எச்சரிக்கை செய்யவில்லையெனில் அவர்களின் சமாதிக்கும் முந்தைய நபிமார்களின் கதியே ஏற்பட்டிருக்கும் என்று.

எந்த ஆன்மீகவாதியும் கூறாத இன்னொரு செய்தியையும் கூறி மறைந்தார்:
என் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள் என்று. அதாவது என்னிடம் கேட்காதீர்கள்! எனக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்! (அதாவது: அல்லாஹ்விடமே கேளுங்கள்).

ஸலவாத்து என்றால் நாம் செல்லுவது போல மந்திரமாகச் சொல்லதல்ல.
‘அல்லாஹும் ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன் மஜீது’
என்று ஸலவாத்து இப்றாஹீமையே நபிகள்(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

யா அல்லாஹ்! இப்றாஹீம்(அலை) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்தது போல முஹம்மது(ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக. யா அல்லாஹ்! இப்றாஹீம்(அலை) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ பரக்கத் செய்தது போல முஹம்மது(ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ பரக்கத் செய்வாயாக. என நபிகள்(ஸல்) அவர்கள் மீது அருள் புரியுமாறு அல்லாஹ்விடம் துஆ செய்வதாகும்.

உயிரோடிருக்கும்போது நான் உங்களுக்காக பிராத்தனை புரிந்தேன். நான் இறந்த பிறகு நீங்கள் எனக்காக துஆ செய்யுங்கள் என்பதே பொருளாகும்.

ஸலவாத்தின் மாண்பினைப் புரியாது ஸலவாத்துல் முன்ஜியா, ஸலவாத்துல் ஹிஜ்ரியா, ஸலவாத்துந் நூரித் தாத்திய்யி, ஸலவாத்துல் ஹஸாரி தாஜுஸ் ஸலவாத், ஸலவாத்துந் நூரானிய்யா, ஸலவாத்துந்நாரியா போன்ற பல்வேறு புதுமையான ஸலவாத்துக்களை புனைந்து, நாடியது நடக்கவும், துன்பம் துயரம் போக்கவும் செல்வவளம் பெருகவும் பெருமானாரைக் களவில் காணவும், விழிப்பு நிலையில் காணவும் இறைவனைத் தரிசிக்கவும் நாள் தோறும் 500 முதல் 4444 வரை ஓதிவரவும், எனக்கூறி அதற்காக மத்ரஸா மாணவர்களை கூலிக்கமர்த்தி, விருந்து படைத்து வியாபாராக்கியுள்ள அவல நிலைகளையும் இன்று நாம் காண முடிகிறது.

பெருமானார்(ஸல்) அவாகளின் பெருவாழ்வைப் பின்பற்றாது அவர்கள் காட்டிய சீரிய வாழ்வு நெறிகளின்படி வாழாது, அவர்களின் சொல், செயல், அங்கீகாரமில்லாது பெரியார், நாதாக்கள் வழி வாழ்வோம் என வாழும் எந்த வாழ்வும் நபி(ஸல்) காட்டிய தூய இஸ்லாமிய வாழ்வாகாது என நமது முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

புறச்சடங்குகளால் பெருமானார்(ஸல்) அவர்களின் அன்பை பெற முடியுமா?
ஆண்டுக்கொரு முறை மௌலிது ஓதிவிடுவதாலோ, மீலாது விழா நடத்திவிடுவதாலோ, வாழ்க்கையில் கடைபிடிக்காது வாய்கிழியப்பேசி பெருமானார்(ஸல்) அவர்களின் உம்மத்தார் என பறை சாற்றுவதாலோ, சம்பிரதாயமாகவோ, சடங்குகளாகவோ சில காரியங்களை ஆற்றிவிடுவதாலோ, அவர்களின் அடக்கவிடத்திலுள்ள மண், கற்களை சேகரித்துப் பாதுகாப்பதாலோ, அவர்களின் பெயரைச் சொன்னதும் இரு கைகளையும் முத்தி கண்களிலே ஒற்றிக் கொள்வதாலோ நாம் அவர்களின் மீது அன்பு காட்டியவர்களாக ஆக முடியாது.
நாம் நபி(ஸல்) அவர்களை எவ்வாறு நேசிப்பது?

வல்லான் அல்லாஹ் வான்மறை மூலம் மிகத்தெளிவாகக் கூறுகிறான்:-
(நபியே! நீர் மக்களிடம்) கூறுவீராக! நீங்கள்(உங்களைப் படைத்த) அல்லாஹ்வை நேசிப்பதாக இருந்தால் என்னை (முழுமையாகப்) பின்பற்றுங்கள். (அப்பொது தான்) உங்களை அல்லாஹ் நேசிப்பான். (3:31).

அவர்களை உயிரினும் மேலாக மதித்து, இதயபூர்வமாய் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் வழுவாது பின்பற்றுவதில் தான் உண்மை முஸ்லிமாக, சரியான உம்மத்தாக நாம் ஆக முடியும் அவர்களை உண்மையாக நேசித்தவர்களாவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் ஹிதாயத் – நேர் வழி – பெற்ற நன்மக்களாகவும், பெருமானார்(ஸல்) அவர்கள் காட்டிய பெரு நெறியில் இறுதி மூச்சுவரை தூய வாழ்வு வாழும் பெருமக்களாகவும் ஆக்கி அருள்வானாக. ஆமீன்.

thanks:Ahmad Baqavi

நீர் : அல்லாஹ்வின் அருட்கொடை


நாம் வானத்திலிருந்து அளவுடன் தண்ணீரை இறக்கிவைத்தோம். பின்னர் அதனைப் பூமியில் நாம் தங்க வைத்தோம். அதனைப் போக்கிவிடவும் நாம் ஆற்றலுடையோர் ஆவோம். மேலும், அதனைக் கொண்டு பேரீச்சை, திராட்சை முதலிய தோப்புகளையும் நாம் உங்களுக்காக உற்பத்தி செய்தோம். அவைகளில் உங்களுக்கு வேண்டிய அநேகமான கனி வர்க்கங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுகிறீர்கள்.” (அல்குர்-ஆன் 18,9)

நிலத்தினடியிலுள்ள நீரானது மேலிருந்து பொழிகின்ற மழை நீரினால் உருவாகின்றது என்ற உண்மை மிக அண்மைக்காலக் கண்டுபிடிப்பாகும். பெய்யும் மழை நீருக்கும் நிழத்தினுள்ளே இருக்கும் நீருக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்பது சமீபகாலம் வரை நிலவி வந்த கருத்தாகும். ஆனால் அல்குர்ஆனோ திட்டவட்டமாக இந்த உண்மையை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எத்துனை அழகாகக் குறிப்பிட்டிருக்கின்றது.!

”நாம் வானத்திலிருந்து திட்டமிட்ட அடிப்படையில் அளவுடன் நீரை இறக்கினோம்”

அதாவது, அழிவை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் மிதமிஞ்சிய நீரை இறக்காமலும் வரட்சியும் நீர்ப்பற்றாக்குறையும் ஏற்படும் விதத்தில் குறைந்த அளவு மழையை இறக்காமலும் பொருத்தமற்ற நேரத்தில் மழை பொழியச் செய்து நீரைப் பயனற்றதாக ஆக்கி விடாமலும் திட்டமிட்ட அடிப்படையில் அளவுடன் இதனை இறக்குகின்றோம் என்பது இதன் கருத்தாகும்.

பின்னர் அதனைப் பூமியினுள்ளே தங்க வைத்தோம்.”

மழையாகப் பொழிந்த நீரே பூமியினுல் இருந்து பெறப்படுகின்றது என்ற உண்மை இதன் மூலம் தெளிவாகின்றது.

தமது வல்லமையைக் கொண்டு நீரைப் பூமியினுள் தேக்கி வைத்துள்ள அல்லாஹுத்தஆலா, தான் நாடினால் அதனைப் போக்கிடவும் சக்தியுடையவனாவான். இதனையே அல்லாஹ்:

அதனைப் போக்கிடவும் நாம் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கின்றோம்” என்று கூறுகின்றான்.

தண்ணீரே வாழ்க்கைக்கு அடிப்படையான ஆதாரமாகும். அதிலிருந்தே எல்லா உயிரினங்களும் தோன்றுகின்றன. இவ்வுண்மையை வசனத்தின் அடுத்த தொடர் விளக்குகின்றது.

”மேலும், அதனைக் கொண்டு (அதவது நீரைக் கொண்டு) பேரீச்சை, திராட்சை முதலிய தோப்புக்களையும் நாம் உங்களுக்கு உற்பத்தி செய்தோம். அவற்றில் உங்களுக்கு வேண்டிய அநேகமான கனிவர்க்கங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்”;

இங்கு, தாவர உலகில் நீரைக் கொண்டு உயிர் பெறும் பேரீச்சை, திராட்சை ஆகிய இரண்டு பழ வர்க்கங்களை அல்லாஹ் உதாரணமாகக் கூறியுள்ளான். தொடர்ந்து வரும் வசனத்தில், நீரினால் வளரும் ஸைதூன் மரத்தைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளான். மனிதன் இந்திரியம் எனும் நீர்த்துளியினால் உருவாகியது போல், உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நீரை அடிப்படையாகக் கொண்டே தோன்றின என்பது ஒரு பேருண்மையாகும்.

உலகில் அனைத்து உயிரினங்களதும் வாழ்வு நீருடன் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றது. பூமியின் மேற்பரப்பில் 70 வீதம் நீராகும். மண்ணுடன் சேர்ந்தும், பூமிக்கு அடியிலும், காற்றிலும், எல்லா உயிரினங்களிடத்தும் நீர் காணப்படுகின்றது. மனித உடலில் 70 வீத நீர் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். மேலும், நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களிலும் காய் கறிகள், பழங்கள் முதலியவற்றிலும் நீர் இருக்கின்றது.

இந்த உண்மையை மற்றுமொரு திருவசனம் மிக அழகாக குறிப்பிடுகின்றது:

”நாம் உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்தே உருவாக்கினோம்”;

நவீன விஞ்ஞானிகள் மிகப் பெரியதொரு கண்டுபிடிப்பாகக் கருதப்படக் கூடிய இந்த உண்மையை அல்குர்ஆன் எத்துனை அழகாக, எழிமையாகக் குறிப்பிட்டுள்ளது என்பதனைக் கவனிக்க வேண்டும்.

உயிரினங்களின் தோற்றத்திற்கு அடிப்படையாகவும் மூலமாகவும் தண்ணீர் அமைந்தது என்ற உண்மையை உலகுக்கு நிறுவிய பெருமை டாவினைச் சாரும் என்று கூறி, அவரைப் பாராட்டும் விஞ்ஞான உலகம், அல்குர்ஆன் இந்த உண்மையைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மிகச் சாதாரணமாக கூறியிருப்பதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிசயத்திலும் அதிசயமாகும்.

அல்குர்ஆனின் இன்னுமொரு வசனம் இதே கருத்தை மேலும் தெளிவாகக் குறிப்பிடுகின்றது:

”அல்லாஹ் அனைத்து உயிரினங்களையும் நீரிலிருந்து படைத்தான்”

இந்த வசனம், ஆரம்பத்தில் உயிரினங்களின் தோற்றம் கடலிலிருந்தே நிகழ்ந்தது. அதாவது, உயிரினங்கள் நீரில் தோன்றின. பின்னர்தான் பலவகை உயிரினங்களும் உருவாகித் தரையிலும் பரவின என்ற நவீன விஞ்ஞானம் நிறுவ முயலும் கருத்தை விளக்குவதாகவும் அமையலாம். அல்லது ஒவ்வோர் உயிரினமும் நீரை அடிப்படைக் கூறாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதாகவும் இருக்க முடியும்.

விஞ்ஞானிகள் பிற கிரகங்களில் நீர் இருக்கின்றதா என ஆராய்கின்றனர். ஏதேனுமொரு கோளில் நீர் இருப்பதாக அறிந்தால், அங்கே உயிரினமும் இருக்கக் கூடும் என ஊகிக்கின்றார்கள். வேறொரு வகையிற் சொல்வதானால், உயிரினம் இருப்பதற்கு நீரை ஓர் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். சந்திரனில் உயிரினம் இல்லை. ஏனெனில், அதனைச் சூழ ஒட்சிசனோ நீரோ கிடையாது. செவ்வாயில் சில வேளை உயிரினம் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. ஏனெனில், அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

நீர் அல்லாஹ்வின் மகத்தானதோர் அருட்கொடை என்பதை இவ்வுண்மைகள் விளக்கி நிற்கின்றன.

பருகுவதற்கு நீரை இன்பமானதாக அல்லாஹ் ஆக்கி வைத்திருக்கின்றான். அதனைக் கசப்போ உவர்ப்போ இன்றி ஆக்கி வைத்திருக்கின்றான். கடல் நீர் உப்புத் தன்மை வாய்ந்தது. அதனை உயிரினங்களால் பருக முடியாது. கடல் நீர் உப்புத் தன்மையை இழந்தால் அது கெட்டுப் போய்விடும். கடல் நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாக்கப்டுகின்றது. இந்த ஆவி மேலே சென்று குளிர்ச்சி யடைந்ததும் மேகமாக மாறுகின்றது. மேகம் மேலும் மேலும் குளிர்ச்சியடைந்து மழை என்ற பெயரில் நன்னீராகப் பொழிகின்றது. அது உயிரினங்களுக்குப் பயன்படும் விதத்தில் ஆறாக ஓடுகின்றது. இந்தச் செயற்பாட்டை அல்லாஹுத்தஆலா இவ்வாறு விளக்குகின்றான்:

”நபியே! நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான் மேகங்களை ஓட்டி அவைகளை ஒன்று சேர்த்து ஒன்றன் மேல் ஒன்றாகவும் அடுக்குகின்றான். பின்னர் அம்மேகங்களின் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கின்றீர். மேலும், அவனே வானத்திலுள்ள மேக மழைகளிலிருந்து ஆலங்கட்டியையும் பொழியச் செய்கின்றான். அதனை அவன் நாடியவர் மீது விழும் படி செய்கின்றான். அவன் நாடியவர்களை விட்டு அதனைத் திருப்பி விடுகின்றான். அதன் மின்னலின் வெளிச்சம் பார்வையைப் பறிக்கப் பார்க்கின்றது.” (ஸுறா அந்நூர் :43 அல்குர்-ஆன்)

மேகங்களில் குறிப்பிட்டதொரு வீதத்தில் மின்னேற்றம் நடைபெறுகின்றது. இதனைத்தான் நாம் மின்னலாகவும் இடியாகவும் காண்கின்றோம். இது நேர் எதிர் மின் சக்திகளுக்கிடையே நடைபெறுகின்ற மிக நுணுக்கமானதொரு செயற்பாடகும். இந்நிகழச்சியில் சிறிதளவேனும் மாற்றம் ஏற்படுமாயின் தண்ணீரானது உவர் நீராக மாறிவிடும். அதனை விளக்கும் வகையில் அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

நீங்கள் குடிக்கின்ற நீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து நீங்கள் அதனைப் பொழிவிக்கின்றீர்களா? அல்லது நாம் பொழிவிக்கின்றோமா? நாம் விரும்பினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக்கி விட்டிருப்போம். இதற்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?” (ஸுரா அல்-வாகிஆ 68-70அல்குர்-ஆன் )

குடிக்கப் பயன்படும் நீர் தன்னுள்ளே கண்ணைப் பறிக்கும் மின்னலையும் காதைச் செவிடாக்கும் இடியையும் கொண்டிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமல்லவா?

”பளீரெனக் தோன்றும் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகின்றான். அதனைக் கண்டு உங்களுக்கு அச்சமும் ஆர்வமும் ஏற்படுகின்றன. மேலும் அவன்தான் (நீர் நிறைந்த) கனமான மேகத்தையும் எழுப்புகின்றான்.” (ஸுறா அர்-ரஃத் :12)

நீரின் முக்கியத்துவத்தை இவ்வாறெல்லாம் விளக்கும் அல்-குர்ஆன், அதன் ஆரம்பத் தோற்றத்தைப் பற்றியும் விளக்குகின்றது:

”நாம் தண்ணீரை வானத்திலிருந்து ஏராளமாகக் கொட்டினோம்” (ஸுறா அபஸ :27)

நீரானது மழை என்ற உருவத்தில் வானத்திலிருந்து கொட்டுவதை இது குறிக்கின்றது என்று சாதாரணமாகக் கூறலாம்.

இவ்வாறே இந்த வசனம் நீரின் ஆரம்பத் தோற்றத்தைப் பற்றி விளக்குகின்றது என்றும் குறிப்பிட முடியும். ஏனெனில், இன்றுள்ள சமுத்திரங்கள் ஆரம்பத்தில் விண்வெளியில் தோன்றிப் பின்னர் பெரிய அளவில் பூமியில் இறங்கியதாக விஞ்ஞான ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன.

பூமியானது சூரியனிலிருந்து பிரிந்த வேளையில் சுமார் 12 ஆயிரம் பாரன்ஹைட் பாகை சூடாக இருந்தது. அந்நேரத்தில் ஒட்சிசன், ஹைதரசன் போன்ற மூலகங்கள் தனித்தனியாகவே இருந்தன. எந்தவொரு இராசாயனக் கலவையும் உருவாகும் வாய்ப்பு இருக்கவில்லை. பின்னர் பூமியானது படிப்படியாகக் குளிர்ச்சியடைய ஆரம்பித்த போது, மூலகங்களின் சேர்க்கைகள் ஏற்படலாயின. ஆனால், பல பொருட்களும் உருவாயின. புவியின் வெப்பமானது சுமார் 4 ஆயிரம் பாகை பாரன்ஹைட் நிலைக்கு வந்த போது, ஒட்சிசனும் ஐதரசனும் இணைந்து தண்ணீர் உருவானது. இச்சந்தர்ப்பத்தில் நீரானது மிகப் பெருமளவில் இருந்திருக்கும். இந்த வகையில், இன்றுள்ள எல்லாச் சமுத்திரங்களும் அண்டவெளியில் இருந்திருக்கும். பின்னர் புவியை நோக்கிப் பாரிய அளவில் இறங்கியிருக்கும். இவ்வாறு சில விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.

”நாம் வானத்திலிருந்து நீரைப் பெரிய அளவில் கொட்டினோம்.” என்ற திருவசனம் இந்த உண்மையைக் குறிப்பதாகவும் இருக்க முடியுமல்லவா?

thanks: ஷெய்க் அகார்

 

நபிகள் நாயகத்தின் ‘அரஃபா’ பேருரையும் உரிமைகள் பிரகடனமும்

முஹம்மத் நபி அவர்கள் உயர்குலமான குரைஷிப்பரம்ரையில் ஆமினா என்ற பெண்ணுக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தை அப்துல்லாஹ்வையும், பிறந்து சில மாதங்களில் தனது தாய் ஆமினாவையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள்.

பொதுவாக அநாதையாக வாழும் குழந்தைகளுக்கு சிறுவர் துஷ்பிரயோகங்கள், மற்றும் சீரில்லாத நடத்தைகளுக்கு ஆட்படுவதுண்டு. ஆனால் முஹம்மத் நபி அவர்கள் அவ்வாறான எவ்வித தீய நடத்தைகளையும் சந்திக்கவுமில்லை. அரங்கேற்றவுமில்லை. மக்காவில் வாழ்ந்த மக்கள் அவர்களை நற்பண்புள்ளவர், நம்பிக்கையாளர், உண்மையாளர் என அழைத்ததன் மூலம் இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

இவர்கள் பிறந்த காலத்தில் மக்கள் கடவுளின் நேரடியான வழிகாட்டல்களை விட்டும் திசைதிரும்பிய மிருகங்களாக வாழ்ந்து வந்தனர், பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை வெறுத்தனர், சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர், நிறவெற, கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீய பண்புகளால் மனிதர்களை அடிமையாக்கி வாழ்ந்தனர்.

விடிவைத்தேடியும், நிம்மதியைத்தேடியும் மக்கள் அலைந்திரியும் இந்த கால கட்டத்தில்தான் முஹம்மத் நபி அவர்கள் ஏக இறைவனின் தூதராக வந்து அம்மக்களுக்குப் போதனை செய்தார்கள். மக்கா என்ற ஊரில் இருந்து கருத்துரிமை பறிக்கப்பட்ட இவர்கள் மதீனா என்ற நகரைத் தேர்வு செய்து அங்கு இஸ்லாமிய அரசையும் நிறுவினார்கள்.

நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி சாதி, நிற, கோத்திர வேறூடற்ற சமூகமாகவும், சகோதரர்களாகவும் அவர்களை மாற்றினார்கள். ஆரம்பத்தில் அவர்களை எதிர்த்த மக்களின் பல்லாயிரக் கணக்கானோர் பிற்காலத்தில் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்று முஹம்மத் நபியுடன் இணைந்தார்கள்.

மதீனாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்த முஹம்மத் நபி அவர்கள் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமையை மதீனா சென்ற பத்தாவது வருடம் துல்ஹஜ் என்ற மாதத்தில் நிறைவேற்றப்போவதாக அறிவிப்பு விடுத்தார்கள். பல்லாயிரக்கணக்கனானோர் அதில் கலந்து கொள்ள மதீனா வந்தனர். அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு மக்கா வந்து அங்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்த பின்னர் மக்காவில் இருந்து கிட்டத்தட்ட 16 கி. மீட்டர்களுக்கு அப்பால் உள்ள அரஃபா என்ற முற்றவெளியில் ஒரு பள்ளத்தாக்கருகில் துல்ஹஜ் பிறை ஒன்பதில் அவர்களை ஒன்றிணைத்து ஒரு பேருரையும் நிகழ்த்தினார்கள். அதில் மனித உரிமை, கொலையாளிகளை மன்னித்தல், வட்டித்தொழிலுக்குத் தடை விதிப்பு, நிற, கோத்திர, குலப்பேதங்களுக்கு முடிவு போன்ற பல அம்சங்கள் உள்ளடங்கி இருந்தன. அவை பற்றி இங்கு சுருக்கமாகக் கவனிப்போம்.

1- மற்றவர் மானம், மரியாதை, சொத்துக்கள் புனிதமானவை

மக்களே அறிந்து கொள்ளுங்கள்! இந்த தினம் எவ்வளவு புனிதமாதோ, இந்த இந்தப் பிரதேசம் எவ்வளவு புனிதமானதோ அதே போன்று உங்களது இரத்தங்களும், உங்களது செல்வங்களும் மற்றவர் மீது -ஹராம்- முழுமையாக விலக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை நபித்தோழர்களுக்கு அன்றுதான் போதித்தார்கள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மாற்றமாக இருபத்தி மூன்று ஆண்டுகள் அவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் இது பற்றி எச்சரித்திருக்கின்றார்கள்.

ஹுதைபியாவில் ஒரு நிகழ்வு: 
ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ஹுதைபியா என்ற இடத்தில் நபிகள் நாயகம் அவர்களுக்கும், மக்கா இறை நிராகரிப்பாளர்களுக்கும் இடையில் ஓர் சமரச நிகழ்வு கையெழுத்தானது. உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபி என்பவர் (இஸ்லாத்தைப் பின்புகு ஏற்றவர்) மக்காவாசிகள் சார்பாக கலந்து கொண்டார். அவர் சமரச நிகழ்வின் இடையில் பாசமாக நபிகள் நாயகத்தின் முகத்தை தடவ தனது கையைக் கொண்டு சென்றார். முகீரா பின் ஷுஃபா என்ற நபித்தோழர் இவரது கையை ஒரு முறைக்குப் பலமுறை தட்டிவிடுகின்றார். இதை அவதானித்த அவர், யார் இவர் ? எனக் கேட்டபோது , (இவரைத்தெரியாதா) இவர்தான் உங்கள் சகோதரரின் மகன் முகீரா என்று கூறப்பட்டது. உடனே அவர்! ஏ! மோசடிக்காரனே! உனது மோசடி விஷயமாக நான் பல தடவைகள் முயற்சி செய்து பலனற்றுப் போனது உனக்கு நினைவில்லையோ எனக் கூறினார். இந்த முகீரா என்பவர் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால் ஜாஹிலிய்ய மக்களுடன் பயணம் சென்று, அவர்களின் பணங்களைத் திருடிக் கொண்டு இஸ்லாத்தில் இணைந்திருந்தார். இஸ்லாத்தை நான் அங்கீகரிக்கின்றேன், ஆனால் அந்த பொருள் தொடர்பானதற்கு நான் பொறுப்பல்ல என நபி (ஸல்) அவர்கள் அழுத்தமாகக் கூறினார்கள். (புகாரி).

பிறிதொரு சந்தர்ப்பத்தில் தனது தோழர்களிடம் உங்களில் யாராவது மற்ற சகோதரனுக்கு மானம், மற்றும் அதுவல்லாத எதிலாவது அநீதி இழைத்திருப்பின் அதிலிந்து இவ்வுலகியே நிரபராதியாகிக் கொள்ளுங்கள். மரணத்தின் பின் வரும் அந்நாளில் தீர்ப்பளிக்கப்படுகின்ற போது உங்களிடம் உள்ள தங்கம், வெள்ளிக் காசுகளைக் கொடுத்து விடுதலை பெறமுடியாது எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

இஸ்லாமில் ஒரு முஸ்லிம் மனிதர்களுக்கும், பிற படைப்பினங்களுக்கும் அநீதி செய்வது முழுமையாக் தடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையின் அடிப்படையில் நடப்பவர்கள் உண்மை முஸ்லிம்கள். இவ்வளவு பெரிய அறிவுரையை 1500 ஆண்டுகளுக்கு முன்னால் நபிகள் நாயகம் அவர்கள் பிரகடனம் செய்தார்கள். அவர்கள் தனது இருபத்தி மூன்று ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில் பத்தொன்பது போர்கள் புரிந்தார்கள். அதில் 1220 பேர் வரைதான் கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கின்றது. ஆனால் 1990ல் ஈராக் மீது அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடையால் மாத்திரம் 500,000. (ஐந்து இலட்சம்) குழந்தைகள் மரணித்தார்கள்.

2003ல் உலக நாடுகளின் காதுகளில் பூச்சுற்றிய அமெரிக்காவின் ஆக்கிரிமிப்பால் 17 இலட்சத்திற்கும் அதிகமான ஈராக்கியர்கள் மாண்டிருக்கின்றார்கள். நாள்தோரும் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றது. நூற்றுக்கணக்கானோர் அங்கவீனர்களாக்கப்படுகின்றனர். இப்படியான செயற்பாடுகளை நபிகள் நாயகம் அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.

ஒரு போர் களத்தில் கற்பமான ஒரு பெண்ணை ஒருவர் அடிமையாக சிறைப்பிடித்து தனது கூடாரத்தினுள் கட்டிவைத்திருந்தார். இவரது நோக்கம் இந்தப் பெண்ணுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாக இருந்தது. இதனை அவதானித்த நபிகள் நாயகம் அவர்கள் என்ன இவர் இந்தப் பெண்ணுடன் உடலு உறவில் ஈடுபட நாடி இருக்கின்றார் போலும் என அங்குள்ள மக்களிடம் கேட்டார்கள். அவர்கள் ஆம் ! அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். எனக்கு அறிந்துதான் இதைக் கேட்டேன். இவர் இந்தப் பெண்ணுடன் நடந்து தனது வாரிசல்லாத ஒருவரை தனக்குரிய வாரிசு எனக் கூறப்போகின்றாரா? அல்லது மற்றவன் வாரிசை தனதாக்கிக் கொள்ளப்போகின்றாரா? என உரத்த குரலில் பேசி விட்டு, இவர் அவ்வாறு நடந்திப்பின் நான் சாபத்தைச் செய்திருப்பேன்; அது அவரை மண்ணறைக்குக் கொண்டு சென்றிருக்கும் எனக் கூறினார்கள். (முஸ்லிம்).

ஜனநாயகம், முதலாளித்துவம் என்றெல்லாம் வாய்கிளியப் பீற்றிக் கொள்ளும் அமெரிக்கப்படைகள் ஈராக்கிலுள்ள அபூகிரைப் சிறைக்கைதிகளுடன், குவாண்டனாமோவிலுள்ள கைதிகளுடன், ஆப்கானில் பாக்ராமிலுள்ள கைதிகளுடன் நடந்து கொள்ளும் முறை பற்றி உலகம் காறித்துப்பியது. நடுநிலையான மீடியாக்களும், நாளேடுகளும் பக்கம் பக்கமாக வெளிச்சம் போட்டுக்காட்டின. இவ்வளவும் மற்றநாடுகளின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக வீணாக ஓட்டப்பட்ட இரத்தங்களாகும் என்பதை உலகுக்குத் தெரியும் என்பதை அமெரிக்கர்கள் தெரிந்து கொண்டே இந்தக் கொள்ளையிலும், கொலையிலும் தம்மை வெட்கமின்றி ஈடுபடுத்திக் கொண்டனர்.

2- குல, கோத்திர, நிற, சாதிவேறுபாடு, அல்லாஹ்வுக்கு தரகர் ஏற்படுத்துதல் போன்ற அறியாமைக்கால அனைத்து பண்பாடுகளும் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டு விட்டதை அறிவித்தமை.

நிரம், கோத்திரம், சாதி வேறுபாடுகளுடன், மனிதர்களை அடிமையாக்குதல், மற்றவர்களின் உரிமைகளைப் பறித்தல், வீட்டோ பவர் நடைமுறையை ஒத்த நடைமுறை, மற்றவர்களைக் கேவலமாக நினைத்தல், அல்லாஹ்வுக்கு இடைத்தரகர்களை உண்டு பண்ணி அவனது கண்ணியத்தைக் குறைத்தல் போன்ற தரம் கெட்ட வேலைகள் ஜாஹிலிய்யப் பண்பாடு என்றே அழைக்கப்படுகின்றது. இவ்வாறான அனைத்து விதமாகன பழக்கங்களும் புதை குழிக்கு அனுப்பப்படுவதாகக் கூறினார்கள்.

ஒரு தாய் மக்கள் நாமென்போம் என்ற உண்மையினை 1500 ஆண்டுகளுக்கு முன்னால் அண்ணல் நபி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. நீங்கள் ஒவ்வொரும் ஆதாமின் பிள்ளைகள், ஆதாம் மண்ணில் இருந்து படைக்கப்பட்டார்,

அபீஸீனியக் கருப்பு அடிமையான பிலால் (ரழி) அவர்கள் அதான் எனப்படும் தொழுகை அழைப்பிற்கு தலைமை முஅத்தினாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். இஸ்லாமல்லாத மதத்தில் பல சாதிகள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மற்றவரது கோயிலுக்குக் கூட செல்லமுடியாத நிலை. இந்தியாவில் தலித்துக்கள் என்ற பிரிவினர் தீண்டத்தகாதர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் கிரிஸ்தவ மதத்திற்கோ, அல்லது புத்த மதத்திற்கோ சென்றாலும் அவர்களின் சாதி ஒழிவதில்லை. நேற்றுவரை முடிவெட்டிக் கொண்டிருந்த ஒருவன் இஸ்லாத்தின் இணைந்த மறு நிமிடமே முஸ்லிம் செல்வந்தரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து ஒன்றரக்கலந்து உறவாடுகின்றான்.

நிற, கோத்திர, தேசிய வெறிகளும், வாதங்களும் இஸ்லாத்தில் இருந்து ஓரம் கட்டப்பட்டவையாகும். உலகுக்கு நாகரீகத்தைக் கற்றுக் கொடுப்பதாகக் கூறும் அமெரிக்காவில் இருக்கும் வெள்ளை மாளிகை என்ற பெயர் கருப்பின மக்களுக்கு எதிராக சூடப்பட்டதாகும் என்பதாக மால்கம் எக்ஸ் என்ற அறிஞர் பற்றிய ஆய்வின் குலாம் முகம்மத் என்ற எழுத்தாளர் குறிப்பிடுகின்றார்.

நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க கருப்பின மக்களின் விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். கிரிஸ்தவர்கள் மத்தியில் புரொடெஸ்டான்ட், கத்தலிக் என்ற இரு வர்க்க முரண்பாட்டடினால் பல ஆண்டுகள் சண்டை நடைபெற்றதாக வரலாறு சொல்கின்றது.

3- தனது குடும்பக் கொலையாளிகளை முதலாவதாக மன்னித்ததாக அறிவித்தமை.

நபிகள் நாயகத்தின் அரஃபாத்தின பேருரையில் உரையில் உள்ளடங்கி இருந்து அம்சங்களில் கொலை குற்றம் புரிந்தோரை மன்னித்ததாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அறிவித்ததும் ஒன்றாகும். இதை சம்பிரதாய அறிவிப்பாகவோ, அல்லது பிறரின் குற்றவாளிகளை மன்னித்தாகவோ விளங்கிக் கொள்ளக் கூடாது.

மாற்றமாக தனது உறவினர்களில் ஒருவரைக் கொலை செய்தமைக்கான மன்னிப்பாகும். இயாஸ் பின் ரபீஆ என்பவர் சிறு வயதில் பனூஸஃத் கோத்திரத்தில் செவிலித்தாய் மூலம் பால்குடித்து வாழ்ந்து கொண்டிருந்த போது ஹுஸைல் என்ற கோத்திரத்தினர் இவரைக் கொலை செய்து விடுகின்றனர். இதற்கு குழுமக் கொலை என்று சொல்வார்கள். இவருக்காக அந்தக் கோத்திரத்தினர் நபிகள் நாயகத்தின் கை ஓங்கி இருப்பதால் நாம் கொலை செய்யப்படுவோம் என்ற பீதியில் வாழ்ந்து வந்தனர். பலிக்குப்பலி தீர்ப்பு தொடர்பில் நமது இரத்தம் தொடர்பானதை முதலவதாக தாம் மன்னித்ததாக நபி நாயகம் அவர்கள் அறிவிப்புச் செய்தததை எவ்வளவு பெரிய மனித நேயப் பண்பாடு என்று சிந்தியுங்கள்.

குஜ்ராத் முஸ்லிம்களை தீயிலிட்டுக் கொழுத்தி, பெண்களின் கற்புகளைச் சூரையாடி இந்து வெறியர்களை அதன் பின்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டவர்களை முஸ்லிம்கள் மனித நேயத்துடன் நடத்தவில்லையா?

இன்று, ஒரு முஸ்லிம் நாடு மற்றொரு நாட்டையோ, அல்லது ஒரு நாட்டில் வாழும் முஸ்லிம்கள் சக சமுதாயத்தவரையோ ஆக்கிரிமிதட்ததாகவோ, குண்டுவைத்துக் கொண்டார்கள் என்றோ ஒரு ஆதாரம் கூட இல்லாத நிலையிலும் உலகில் கருணையையும், அன்பையும் போதித்த நபிகள் நாயகத்தையும், அவரைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில் மீடியாக்கள் போட்டி போட்டுக்கொள்கின்றன.

மாவோஸ்டிகள், நக்ஸலைட்டுகள், குஜ்ராத் குண்டர்கள், புலிப்பயங்கரவாதிகள் பற்றி மௌனமாக இருக்கும் பத்திரிக்கைகள் முஸ்லிம்களை எப்படி சீண்டுகின்றார்கள் என்று பாருங்கள்.

4- வட்டி என்ற வன்கொடுமை ஒழிப்புப் பிரகடனம்.

மனிதனை கெளரவமாக ஏமாற்றும் யூதத் தொழில்தான் வட்டி, வட்டித்தொழிலை உலகில் ஆரம்பித்தவர்கள் யூதர்களே! ஏழை மனிதர்களின் உதிரங்களை உரிஞ்சி, அவர்களைக் கசைந்து பிழியும் பாதுகாப்புடன் நடந்தேறும் மிகப் பெரும் கொள்ளை. இந்தக் கொள்ளையால் எத்துணை தற்கொலைகள், எத்துணை குடும்பத்தகராறுகள், எத்துணை சமூகக் கொடுமைகள் நாளாந்தம் அரங்கேறுகின்றன என்பதை நாம் அறிவோம்.

இதையும் மண்ணோடு புதைக்கப்படுகின்றது என அறிவித்து தனது சிறிய தந்தையர்களில் ஒருவரான அப்பாஸ் என்பவர் கொடுத்த வட்டியைத் தள்ளுபடி செய்வதாக தனது குடும்பத்தில் இருந்தே ஆரம்பம் செய்தார்கள்.

இந்தியாவில் வருடந்தோறும் விவசாசிகள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர், காரணம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலை என்கின்றனர், ஒன்றோ குலம், ஒருவனே தேவன் என வாயளவிலும், ஏட்டளவிலும் கோட்பாடுகள் புதைந்து போய் இருப்பதும், ஒருவனுக்குச் செய்கின்ற பண உதவிக்காக பல ரூபாய்களை கொள்ளை அடிப்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

வட்டித் தொழில் அல்லாஹ்வோடும், அவனது தூதரோடும் போராடுவதற்குச் சமமான பெரும் பாவங்களில் ஒன்று என இஸ்லாம் ஆணித்தராமகக் கூறுவதுடன் வட்டி என்றோ ஒரு நாள் அழிக்கப்படும், தர்மம் உயிர் வாழும், கடனாளியை மன்னிப்பதால் மறுமையில் அல்லாஹ்வின் நிழலின் கீழ் கௌரவம். கடனாளி திருப்பித் தரமுடியாமல் இருப்பின் காலக்கெடு வழங்குதல், ஈ அல்லது அரைவாசியை மன்னித்து, மீதியைப் பெறுதல் போன்ற மனிதர்களுக்கு ஏதுவான பல நடைமுறைகளை அறிமுகம் செய்துள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வட்டி என்றோ ஒரு நாள் நஷ்டத்தைத் தழுவும் என்பதை அமெரிக்காவில் இந்த வருடத்தில் மாத்திரம் 123 வட்டி வங்கிகள் மூடப்பட்டிருப்பதும், வட்டி வங்கிகளின் ஒரு அங்கமாக அமைக்கப்படுவதும், இஸ்லாமியப் பொருளாதார முறை பற்றி அடிக்கடி பேசப்படுவதும் வட்டியின் தாக்கங்களில் உள்ளவையாகும்.

5- பெண்களின் உரிமைகளைப் பேணுமாறு உரைத்தமை.

நபிகள் நாயகம் அவர்கள் அரஃபா தினப் பேருரையில் : பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள், நிச்சயமாக நீங்கள் அவர்களை அல்லாஹ்வின் அமானிதமாகக் கைப்பிடித்துள்ளீர்கள், அவர்களின் மர்மஸ்தானங்களை அல்லாஹ்வின் வார்த்தை மூலம் ஆகுமாக்கிக் கொண்டீர்கள், நீங்கள் நியாயமான முறையில் அவர்களுக்கு ஆடைய வாங்கிக் கொடுப்பதும், உண்ணக் கொடுப்பதும் உங்கள் மீதுள்ள கடமையாகும். நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் வீடுகளில் நுழைவிப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல, உங்களை மீறி செயல்பட்டால் காயம் ஏற்படாதவாறு அவர்களை நீங்கள் அடியுங்கள் எனப் பிரஸ்தாபித்தார்கள்.

ஆண்கள் பெண்களை நடாத்தும் முறை, அவர்கள் மீது கணவன்மாருக்குரிய கடமைகள், மனைவியர் கணவன் விஷயத்தில் நடந்து கொள்ளும் முறை பற்றி மேலும் பல வழிமுறைகள் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளன. அவை அனைத்தும் ஒரு குடும்பத்தின் சுபீட்சமான வாழ்வை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

நவீன பெண்ணியம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், அது இஸ்லாத்தின் எதிரிகளின் மிகப்பெரிய ஆயுதம். இஸ்லாமியப் பெண்ணியம் என்ற புதிய சொற்றடர் அமெரிக்காவில் பரவலாக பேசப்படுகின்றது.

பெண்களைப் பாவிகளாக, உயிரற்ற சடங்களாக மதிக்கின்ற மதநூல்களைப்படித்துவிட்டு இஸ்லாத்திலும் இப்படித்தான் இருக்கும் என்ற தப்பெண்ணத்தில், இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை, அடிமைகள் போல நடத்தப்படுகின்றார்கள் என்றெல்லாம் தப்புப் பிரச்சாரம் செய்கின்றனர். அதனால் இஸ்லாமியப் பெண்ணியம் பற்றி அடிக்கடி அலட்டிக் கொள்கின்றனர். அதனால் என்ன விரும்புகின்றார்கள்.! பெண்களின் விடுதலையா என்றால் ஆம், ஆனால் பின்வருமாறு.

 • முறையற்ற திருமண முறை. இதை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் ‘ஒற்றைப் பெற்றோர் முறை’ என்கிறார்கள். (Single parenthood).
 • கருப்பைச் சுதந்திரம். (கண்டவனுடன் படுத்து உறங்கும் உரிமை, பெண்களை பெண்கள் திருமணம் செய்யும் உரிமை)
 • பெண் தான் விரும்பும் இடம் செல்ல அனுமதித்தல்
 • அன்னிய ஆடவர் ஒருவனுடன் தனிமையில் இருந்து சல்லாபம் செய்தல்,
 • மதம், மொழிகளுக்கு அப்பால் நின்று கணவனைத் தெரிவு செய்தல் போன்ற பெண்ணின் கௌரவத்தைக் குறைத்து நடுவீதியில் சீரழிய வைக்கும் நாகரிகம்.
 • 

பெண்ணுரிமைப் பற்றி பேசுவோர் பெண்களை மதித்த விதம் தெரியுமா?

 • ஆதாமைக் கெடுத்தது ஏவாள். (பைபிள்)
 • பெண் தீமைகளின் ஊற்றுக்கண். (கிரேக்கர்களின் ஆரம்ப கால நம்பிக்கை)
 • பெண்களுக்கு ஆண்மா உண்டா ? இல்லையா ? என்ற கட்டயப் பஞ்சாயத்து.
 • ஹிஜாப் அணியும் பெண்ணுக்கு அபராதம் விதிக்கும் ஃபிரான்ஸில் 1939 வருடம் வரை ஒரு பெண் விற்பதும், வாங்குவதும் குற்றமாகும். கணவனே அதைச் செய்ய முழு உரிமையுடைவன், அதில் கணவனின் உத்தரவின்றி எவ்வித கையாடலும் செய்யமுடியாது என்ற சட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. பின்பு ஆணாதிக்கத்தைப் பிரதிபலிக்கும் சில நிபந்தனைகளுடன் அது மாற்றமடைந்தது.
 • ஒரு பெண் சொத்துக்களை தனக்கென வைத்திருக்க முடியாது என்ற நடைமுறை ஜேர்மனியில் 1959 வருடம் வரை நிலவியது. மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் சம்பள முறையே அங்கும் பின்பற்றப்படுகின்றது. அதாவது: ஒரு பெண்ணிண் ஊதியம் ஒரு ஆணின் ஓதியத்தின் அரைவாசி என்ற நடை முறை. பிரட்டனில் இன்றும் ஆண்களுக்கு சரிசமமான பதவிகளில் இருக்கும் 75 வீதம் பேர் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட அரைவாசியாகும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
 • இந்தியாவில் உயர்ஜாதியினரின் நாய்க்கு உணவு கொடுத்த தலித் பெண்ணுக்கு ரூபா பதினைந்தாயிரம் அபராதம். நாயும் அவள் வீட்டில் விடப்பட்டது என்ற அசிங்கமான நடைமுறை, இது இவ்வாண்டின் ஹாட் நிவ்ஸ்.

உனது மனைவியின் வாயில் நீ ஊட்டி விடுகின்ற ஒரு கவள உணவும் தர்மமே! போதனை செய்கின்ற மார்க்கம் இஸ்லாம். தலாக் என்ற விவாகரத்து செய்யப்படும் பெண் அவளது விவாகம் ரத்தாகியதா? இல்லையா என்பதை நீதிபதி தீர்மானிப்பதற்கு முன்னால் அவள் தனது கணவனின் பொறுப்பில், அவனது செலவில் பராமரிக்கப்பட வேண்டும், அவனே குடியிருப்பு வசதி செய்து தர வேண்டும் என்றும் கூறும் இந்த அற்புதமான மார்க்கத்தில் பெண்களுக்கு எப்படி எல்லாம் உரிமைகள் வழங்கப்பட்டிருக்கும் என்பதை நடுநிலையோடு சிந்தியுங்கள்.

அல்லாஹ்வால் விசாரிக்கப்படுவதை அஞ்சியமை
இதுவும் நபிகள் நாயகத்தின் உரையில் இறுதியாக உள்ளடங்கி இருந்த அம்சமாகும். இப்படியாதொரு நடைமுறை உலகில் எந்தத் தலைவரிடமும் காணமுடியாதாகும். என்ன சொன்னார்கள் என்பதைக் கவனியுங்கள்!

நான் இவ்வாண்டின் பின் உங்களை சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது. மறுமையில் அல்லாஹ் உங்களிடம் என்னைப் பற்றிக் கேட்பான், நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள் எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் உங்கள் பணியை சரியாகவும், நிரப்பமாகவும் செய்தீர்கள் என்று அல்லாஹ்விடம் நாம் சாட்சி கூறுவோம் எனக் கூறினார்கள், அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், வானின் பக்கமாக தனது ஆட்காட்டி விரலை அசைத்து, பின்பு அதை மக்கள் பக்கம் காட்டடியவர்களாக அல்லாஹ்வே! நீயே சாட்சியாக இரு! நீயே சாட்சியாக இரு! நீயே சாட்சியாக இரு! மூன்று தடவைகள் அல்லாஹ்வை வேண்டி விடை பெற்றார்கள்.

thanks:எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி (இலங்கை)http://www.islamkalvi.com

இஸ்லாம் அறிவியலுக்கு எதிரானதா?

ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காக எப்படிப் படைத்திருக்கின்றான்  என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான். (அல்குர்ஆன்:71-15)

இஸ்லாமிய மார்க்கம் அகிலத்தின் இரட்சகனான வல்ல அல்லாஹ்வால் மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட நெறியாகும். இந்த மார்க்கம் மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விசயங்களையும் மனிதனுக்குப் போதித்திருக்கின்றது. உலகம் அழியும் நாள்வரை மனிதர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் தீர்வுகளைக் கூறிக்கொண்டிருக்கிறது. காரணம் இந்த மார்க்கம் முழுமையான மார்க்கம். மனித சமுதாயத்திற்கு வழிகாட்ட வந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இந்த மார்க்கத்தை முழுமைப்படுத்திவிட்டதாக வல்ல இறைவன் அல்லாஹ் கூறுகின்றான்.

இன்றைய தினம் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கிவிட்டேன். மேலும் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கிவிட்டேன். இன்னும் உங்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்க்கை நெறியாகவும் தேர்ந்தெடுத்துள்ளேன். (அல்குர்ஆன்:5-3)

மனித வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கின்ற பரிசுத்த குர்ஆன் மனிதன் எக்காலத்திலும் சந்திக்கின்ற மார்க்கம் சம்பந்தப்பட்ட விசயங்களானாலும் சரி அறிவியல் விசயங்களானாலும் சரி எல்லாவற்றையும்; விளக்கிக் கூறுகின்றது. மனிதன் இறைவனுக்குச் செலுத்த வேண்டிய வணக்க வழிபாடு என்னென்ன என்பதைக் குறிப்பிடுகின்றது திருக்குர்ஆன். அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை இறைத்தூதர் விளக்கிக் கூறியிருக்கின்றார்கள்.

இவ்வாறே ஒவ்வொரு காலத்திலும்  ஏற்படுகின்ற அறிவியல் மாற்றங்களைப் பற்றியும் திருக்குர்ஆன் அறிவிக்கின்றது. திருக்குர்ஆன் இறக்கப்பட்ட காலத்தில் இன்று நாம் கண்டுகொண்டிருக்கின்ற எந்த அறிவியல் வளர்ச்சியும் இருந்திருக்கவில்லை. ஆனால் அறிவியல் வளர்ச்சியில் மனிதன் ஈடுபடவேண்டுமென்று அன்றே இறைவன் மனிதனுக்குக் கட்டளையிட்டுவிட்டான்.

திருக்குர்ஆன் வசனங்களைப் படித்துப் பார்க்கும் போது இதை நம்மால் புரிய முடியும். மனிதன் தனது அறிவைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்யுமாறு தூண்டுகின்ற வசனங்களைச் சிந்தித்துப் பார்ப்பது இறைநம்பிக்கையாளர்கள் மீது கடமையாக இருக்கின்றது.

ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காக எப்படிப் படைத்திருக்கின்றான்  என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான். (அல்குர்ஆன்:71-15)

அல்லாஹ் ஏழு வானங்களைப் படைத்திருக்கின்றான் என்றும் அதை அடுக்கடுக்காகப் படைத்திருக்கின்றான் என்றும் குர்ஆன் கூறுகிறது.  இந்த விசயத்தை நீங்கள் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டாமா என்று   மக்களைப் பார்த்து இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் கேட்டார்கள். இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தூதராக அனுப்பப்பட்டவர்தான் நூஹ்(அலை)  அவர்கள்.

அப்படியானால் மனிதன் அல்லாஹ்வுடைய படைப்பைச் சிந்தித்து ஆராய்ச்சி செய்யுமாறு ஆதிமுதலே இறைவன் கட்டளையிட்டுள்ளான் என்பது தெரியவருகின்றது. மேலும் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்!

நிச்சயமாக வானங்களும்  பூமியும் முதலில் இணைந்திருந்தன என்பதையும்  அவற்றை நாமே பிரித்தமைத்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் நீரிலிருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்பாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)

இன்னும் அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். வானில் தத்தமது வட்டவரையறைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.  (அல்குர்ஆன் 21:33)

வானங்கள், பூமி என்ற பிரபஞ்சத்தையும் அல்லாஹ் படைத்துள்ள மற்ற படைப்புகளையும் அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?  (அல்குர்ஆன் 7:185)

சூரியன் தன் வரையறைக்குள் சென்று கொண்டிருக்கிறது. இது யாவரையும் மிகைத்தோனும் யாவற்றையும் நன்கு அறிந்தோனுமாகிய இறைவன் விதித்ததாகும். இது அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்.
இன்னும்  உலர்ந்து வளைந்த பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரை சந்திரனுக்கு நாம் பல நிலைகளை ஏற்படுத்தியிருக்கின்றோம். சூரியன் சந்திரனை நெருங்கிப் பிடிக்க முடியாது. இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் தம் வட்ட வரையறைக்குள் நீந்தி வருகின்றன.

(அல்குர்ஆன்:36:38-40)
இது போன்ற வசனங்களை வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனின் நூற்றுக்கணக்கான இடங்களில் சொல்கின்றான் என்றால் அவற்றைப் படித்துவிட்டுக் கடந்து செல்வதற்காக அல்ல. சிந்தித்து ஆராய்வதற்காகவும் அவற்றைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பதற்காகவுமே கூறுகின்றான்.

சிந்தனையைத் தூண்டுகின்ற இவை போன்ற வசனங்களையெல்லாம் ஆய்வு  செய்யக்கூடியவர்களும் அதிலிருந்து பயன்பெறக்கூடியவர்களும் பெரும்பாலும் முஸ்லிம் அல்லாதவர்களாகவே இருக்கின்றனர். அல்லாஹ்வுடைய படைப்புகளைப் பற்றி ஆய்வு செய்து பயன்பெறுகின்ற பொறுப்பை மாற்றான் கையில் கொடுத்துவிட்டார்களோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு அறிவியல் விசயங்களை நம்புவதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலும் முஸ்லிம் சமுதாயம் மிகவும் பின்னடைந்து இருக்கிறது.

குறிப்பாக அரபி மதரசாக்களில் குர்ஆன், சுன்னா கல்வியைக் கற்பவர்கள் குர்ஆன் கூறுகின்ற இவை போன்ற உண்மைகளைப் பற்றி ஆய்வதை விட்டும் கண்ணை மூடிக்கொள்கின்றனர். வளர்ந்து வருகின்ற அறிவியல் உலகத்தில் இஸ்லாம் எந்த வகையிலும் உண்மையான அறிவியலுக்கு மாற்றமானதில்லை என்பதை நிரூபிப்பதற்கு மார்க்கம் கற்ற அறிஞர்கள் முன் வரவேண்டும்.

நாம் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன்வராவிட்டாலும் அல்லாஹ்வுடைய படைப்புகளைப் பற்றி ஆய்வு செய்து வெளியில் கொண்டுவருகின்ற ஆராய்ச்சியாளர்களின் சரியான ஆய்வுகளை இஸ்லாத்திற்கு விரோதமில்லாதிருக்கும் நிலையில் அதை ஏற்றுக்கொண்டு செயல்படவேனும் முன்வர வேண்டும்.

அவர்கள் திருக்குர்ஆனைச் சிந்தித்து ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன்:4:82)

thanks:www.jaqh.org

அறிவுக்கு விருந்து!!

பூமியானது தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனைச்சுற்றி வருகின்றது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருப்பீர்கள். பூமியில் இருக்கும் நாம் முதலில் நம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அவதானித்துக்கொள்ள வேண்டும் என்பதை பூமி சொல்லித்தரும் பாடமாக அறிந்து கொள்வோம். அத்தோடு இதையும் அறிந்து கொள்ளுங்கள்.

***பூமியின் நீர்ப்பரப்பு:  139,440,000 சதுர கி.மீ

***பூமியின் நிலப்பரப்பு: 14 கோடி 90லட்சம் கி.மீxகி.மீ

***பூமியின் விட்டம்: 7920 கி.மீ

***பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம்: 240,000 கி.மீ

***பூமியிலிருந்து வாயு பரந்திருக்கும் தூரம் :1000 கி.மீ

***பூமி சுழலும் வேகம்: 66,600 கிமீ/மணிக்கு

***பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது : அமாவாசை

***சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவது: பெளர்ணமி

***பூமி சுழலும் பக்கம்: மேற்கிலிருந்து கிழக்காக

***பூமிக்கு சூரிய ஒளி வர எடுக்கும் நேரம்: 480 விநாடிகள்

***சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படும் நிழல் பூமியின் மீது விழும் போது “சூரிய கிரகணம்”  ஏற்படும் அதாவதுஅமாவாசையில் வரும்

***சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும் பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் போது “சந்திரகிரகணம்” ஏற்படும்; அதாவது பெளர்ணமியில் வரும்

பூமியின் சராசரி உஷ்ணம் ஒரு டிகிரி உயர்ந்தால் கூட நோயால் 30 ஆயிரம் மக்கள் இறப்பார்கள் — ஆராய்ச்சி கருத்து .

கார்கள் இப்படித்தான் இருக்குமா – பிரமிக்க வைக்கும் படங்களுடன் 2


உயர் தொழில்நுட்பமும் இளைய தலைமுறையின் ரசனையும் இணைந்து  பல விதமான வடிவங்களில் புதிய கார்களின் தயாரிப்பிற்கு அடித்தளமிட்டுக் கொடுத்துள்ளது. ஹோண்டா , மெர்சிடீஸ் உள்ளிட்ட பல பிரபல நிறுவங்கள் வித்தியாசமான டிசைன்களில் கார்களை தயாரித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த கண்காட்சியொன்றில்  இந்த சொகுசுக் கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.  பெரும்பாலும் எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் கார்களில் பாதுகாப்பு, அழகு, சொகுசான பயணம் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் குறைந்த எடையிலான கார்களை உருவாக்குவதில் கடுமையான போட்டியும் நிலவுகிறது.

பெரும்பான்மையான கார்கள் மாற்று எரிபொருளை பயன்படுத்தும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. எது எப்படியோ இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள கார்களின் அழகு கண்ணைப் பறிப்பதால் மக்களிடத்தில் இது போன்ற கண்காட்சிகளுக்கு அதிக வரவேற்பிருப்பது  தெரிகிறது.